ஜிஎஸ்டி வரி குறைப்பு... ஆவின் பால் பொருட்களின் விலை குறைப்பு

Meenakshi
Sep 22, 2025,06:20 PM IST

சென்னை: ஜிஎஸ்டி வரி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் பால் பொருட்களின் விலையை குறைந்துள்ளது ஆவின் நிறுவனம்.


மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பு இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. இதனால் பல்வேறு பொருட்களின் விலை இன்று குறைந்துள்ளது. இந்நிலையில், ஆவின் பால் பொருட்களின் விலையும் குறைந்துள்ளது.




ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்ட 200 கிராம் பன்னீர் ரூ.110க்கும், ரூ. 300க்கு விற்பனை செய்யப்பட்ட 500 கிராம் பன்னீர் ரூ.275க்கும், ரூ.690க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் நெய் ரூ.650க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல் 50 மில்லி லிட்டர் நெய் ரூ.45க்கும், 100 மில்லி லிட்டர் நெய் ரூ.80க்கும், 200 மில்லி லிட்டர் நெய் ரூ.150க்கும், 500 மில்லி லிட்டர் நெய் 354க்கும், 5 லிட்டர் நெய் ரூ.3,250க்கும், 15 கிலோ நெய் ரூ.10,725க்கும் விலை நிர்ணயம் செய்ய்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.


இந்த விலை குறைப்பு ஆவின் பால் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.