அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!

Su.tha Arivalagan
Sep 14, 2026,11:04 AM IST

- புலவர் ப. ஈஸ்வரநாதன்


விநாயகர் பெருமானின் பிறப்பு மற்றும் அவதாரத்தை நினைவு கூறும் வகையில் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் கொண்டாடப்படும் மிகப்பெரிய விழாவாகும்.


பார்வதிதேவி தன் மெய்க்காலில் இருந்தும் சந்தனக் கலவையால் ஒரு சிறுவனின் உருவத்தை செய்து உயிர் கொடுத்தார். குளிக்கச் செல்லும் முன் தன் காவலாக அந்த சிறுவனை வாசலில் நிற்குமாறு கூறினார்.


சிறுவன் பார்வதிதேவிக்கு காவலாக இருந்த நிலையில் அங்கு வந்த சிவபெருமானை உள்ளே செல்லவிடாமல் தடுத்துவிட்டான். கோபம் அடைந்த சிவன் அவனது தலையை துண்டித்து விடுகிறார். 


நடந்ததை அறிந்த பார்வதி தேவி மிகுந்த வருத்தம் அடைந்தாள்.அதனைக் கண்ட சிவன் ஒரு யானையின் தலையைப் பொருத்தி அவருக்கு மீள் உயிர் அளித்தார். அத்தகைய சிறப்புமிருந்த சதுர்த்தி நாளிலேயே விநாயகர் உருவானதாக நம்பப்படுகிறது.


மேலும் கஜமுகாசுரன் என்ற அசுரனை அழிக்கவும் ஆவணி சதுர்த்தியில் விநாயகர் அருள் புரிந்ததாக  புராணங்கள் கூறுகிறது.




பொதுவிழா வரலாறு...


பண்டையக் காலத்தில் விநாயகர் சதுர்த்தி வீடுகளில் மட்டுமே கொண்டாடப்படும் எளிய வழிபாடாகவும், சிறு விழாவாகவும் நடந்தது. பின்னர் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி காலத்தில் ஊக்குவிக்கப்பட்டதாகவும் வரலாறுகள் கூறுகின்றன.


1893-ஆம் ஆண்டில் சுதந்திர போராட்ட வீரர். லோகமான்ய திலகர் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து மக்களை ஒன்றிணைப்பதற்காகவும் தேசப்பற்றை வளர்ப்பதற்காகவும் ... விநாயகர் சதுர்த்தியை பொதுவிழாவாக மாற்றி பெரு நகரங்களில் நடத்த தொடங்கினார். அன்று முதல் மிகப்பெரிய அளவிலான சமூக விழாவாக இன்றும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது.


வீடுகளில் களிமண்ணால்  செய்த விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது.


கொழுக்கட்டை, சுண்டல், மற்றும் பிடித்தமான அருகம்புல் மாலை, எருக்கம் பூ சாத்தி பிறகு பழங்கள், பொரிகடலை, லட்டு, வைத்தும் பூஜைகள் செய்துமுடித்து மூன்றாவது நாளில் நீர்நிலைகளில் சிலையை கரைத்து வழிபடுவதும் இன்றும் பொதுவிழாவாக கொண்டாடப்பட்டு வருவது சிறப்பாகும்.


(புலவர் ப.ஈஸ்வரநாதன். சென்னை. தமிழ் இலக்கியம் பயின்று  பி.லிட் பட்டம் பெற்றவர். இலக்கிய பற்றாளர், பேச்சாளர். கவிஞர். பல இலக்கிய மன்றத்தில் நடுவர் மற்றும் நெறியாளர்.)