வீரம் செழித்திடும் இமயத்தில்.. பாரத கொடியை பார்புகழ நாட்டிடுவோம்!
- சிவ.ஆ. மலர்விழி ராஜா
பாரத தாயின் மலரடி
பணிந்திடுவோம்
பாரத மண்ணின்
மகிமையை போற்றிடுவோம்
மக்களை உயர்த்தும்
அரசினை வணங்கிடுவோம்....
மாசில்லா தேசம் இந்தியா என்றே
பெருமையை புகழ்ந்திடுவோம்.....
வீசும் தென்றலிலும்
வீணையின் நாதம்
கேட்டிடுவோம்.....
நாட்டின் பண்பினை
உலகுக்கு
உணர்த்திடுவோம்......
வீரம் செழித்திடும்
இமயத்தில்
பாரத கொடியை
பார்புகழ நாட்டிடுவோம்......
வெள்ளி பனி மலையில்
வீரம் மிக்க நமது
வீரமகன்களின் பாதம்
பணிந்திடுவோம்.......
இந்திய தேசம் நமதே
என்று மகிழ்ந்திடுவோம்......
குடியரசு தலைவரையும்
வாழ்த்தி வணங்கிடுவோம்
முழங்கிடுவோம்.......
வாழ்க பாரதம் வளர்க
இந்திய தேசம் .....
ஜெய் ஹிந்த்.....!
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)