சிலுவையை மீட்பின் அடையாளமாக்கியவரே!
Apr 05, 2026,09:46 AM IST
- உரொனால்டு இரீகன்
மண்ணுலகத்து மாந்தரை
மீட்க வந்த
விண்ணுலகத்து
விடிவெள்ளியே
அவமான அடையாளமான
சிலுவையை
அகிலமெங்கும் மீட்பின்
அடையாளமாக்கியவரே
கல்லறையை மட்டும்
நீர் பிளக்கவில்லை
காலத்தையும்
இரண்டாக பிளந்துள்ளீர்
உயிரை எடுத்தே பழக்கப்பட்ட
கல்லறையும்
உயிரைக் கொடுத்து அதனை
மீட்டுக் கொண்டது
உம் வாழ்வின் விழுமியங்களை அறிந்து
நாங்கள் மீட்பு கொள்வது எப்போது?
(உரொனால்டு இரீகன், இயந்திரவியல் பொறியாளர்)