Tamil New Year: முத்திரை பதிக்கப் போகும் தமிழ்ப் புத்தாண்டு.. சித்திரை மாத சிறப்புகள்!

Su.tha Arivalagan
Apr 14, 2026,04:16 PM IST
- ஸ்வர்ணலட்சுமி

தமிழ் புத்தாண்டு பராபவ வருடம் 20 26 ஏப்ரல் மாதம் 14ஆம் நாள் சித்திரை மாதம்  பிறந்துள்ளது. தென் தமிழ் சார்பாக வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

விசுவா வசு வருடம் நிறைவடைந்து பராபவ ஆண்டு இன்று பிறந்துள்ளது. பஞ்சாங்கத்தில் 60 ஆண்டுகள் சுழற்சியில்  பராபவ  ஆண்டு என்பது 40 வது ஆண்டாக கருதப்படுகிறது. தமிழ் ஆண்டின் முதல் மாதமான சித்திரை மாதம் வசந்த  காலத்தின் தொடக்கத்தையும், சூரியன் மேஷ ராசியில் பிரவேசிப்பதையும் குறிக்கிறது.

இந்த அருமையான மாதத்தில் தமிழ் புத்தாண்டு,சித்திரை திருவிழா,மதுரை மீனாட்சி அம்மன் கல்யாணம் அக்ஷய திருதியை, உழைப்பாளர் தினம்,சித்ரா பௌர்ணமி  மற்றும் அன்னையர் தினம் போன்ற முக்கிய நிகழ்வுகள் கொண்டாடப்படுகின்றன. இது புதிய தொடக்கம், செல்வம் மற்றும் ஆன்மீக வழிபாட்டிற்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த நாளில் வீடுகளில் பெரியவர்கள் பஞ்சாங்கம் வாசிப்பதும்,இறைவனை வழிபடுவதும் வழக்கமாகும்.புதிய முயற்சிகளை தொடங்க சிறந்த மாதமாகும்.

ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி முதல் மே மாதம் 14ஆம் தேதி வரை உள்ள சித்திரை மாதத்தின் விசேஷ நாட்கள் மற்றும் விரத நாட்களை பற்றி பார்ப்போம்.
 


சித்திரை மாத விசேஷ நாட்கள்:
 
ஏப்ரல் 14 :சித்திரை 1- தமிழ் வருட பிறப்பு, திருச்சி சமயபுரம் மாரியம்மன், வெக்காளியம்மன்  சித்திரை தேர் திருவிழா.

ஏப்ரல் 15 :சித்திரை 2- பிரதோஷம்.

ஏப்ரல் 16 : சித்திரை 3 -மாத சிவராத்திரி,இரவு 07.32 முதல் அமாவாசை திதி.

ஏப்ரல் 17 :சித்திரை 4- மாலை 5:47 வரை அமாவாசை திதி.

ஏப்ரல் 19: சித்திரை 6- கிருத்திகை விரதம். மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்.

ஏப்ரல் 20: சித்திரை 7- அட்சய திருதியை.
 
ஏப்ரல் 21: சித்திரை 8- பஞ்சமி திதி.

ஏப்ரல் 22 :சித்திரை 9- வளர்பிறை சஷ்டி.

ஏப்ரல் 24 :சித்திரை 11- அஷ்டமி திதி( வளர்பிறை).

ஏப்ரல் 25 :சித்திரை 12- நவமி திதி.

ஏப்ரல் 27 :சித்திரை 14- ஏகாதசி விரதம்.

மே 1: சித்திரை 18- சித்ரா பௌர்ணமி.   உழைப்பாளர் தினம்.

மே 4: சித்திரை 21- அக்னி நட்சத்திரம் ஆரம்பம்.

மே 5: சித்திரை 22- சங்கடஹர சதுர்த்தி.

மே 7 :சித்திரை24- தேய்பிறை சஷ்டி விரதம்.

மே 9: சித்திரை 26- திருவோண விரதம்.

மே 10 : சித்திரை 27-அன்னையர் தினம். (Mother's day ).

மே 13 :சித்திரை 30- ஏகாதசி விரதம்.
 
மே 14: சித்திரை 31- பிரதோஷம்.

இனிய தமிழ் புத்தாண்டில் ஆண்டு முழுவதும் அனைவரும் உடல் நலம், நீள் ஆயுள்,நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞானம் பெற்று மேலோங்கி வாழ்வோமாக. மேலும் இது போன்ற சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.