சோகம் துடைக்கும் தேன்.. சுடர்விடும் சிந்தனைத் தூண்.. கவிஞன் எனும் மந்திரவாதி!
Mar 21, 2026,04:54 PM IST
- டாக்டர் கோ.லதா
மொழிகள் பலவாய் இருந்தாலும்
உணர்வுகள் கவிதைக்கே உரியது
எல்லைகள் இல்லாத உலகத்தில்
அன்பை விதைக்கும் கவிதை
மானுடம் போற்றும் மழலை
மனதின் ஆழத்து உணர்வு
கவிதை அது ஒரு கலை
கனிந்த இதயத்தின் மொழி
சோகம் துடைக்கும் தேன்
சுடர்விடும் சிந்தனைத் தூண்
கவிஞன் எனும் மந்திரவாதி
எழுத்துக்களால் எழில் செய்வான்.
காகிதத்தில் உயிர் தெறிக்கும்
கற்பனை திறம் மலரும்
அமைதி சொல்லும் கவிதை
அறம் போற்றும் கவிதை
பாரதியின் வாரிசுகளாய்
புதுமை பாடி மகிழ்வோம்
கவிதை தினமே மகிழ்
கவிதை வாசித்தே களி
நல்வாழ்வு தந்திடும் வரிகள்
நம்பிக்கை ஊட்டிடும் கனிகள்
கவிதையின் மகுடம் ஏற்றி
கவிதையாய் உலகை மாற்ற.....
இனிய சர்வதேச கவிதை தின வாழ்த்துக்கள்