கலைமகளே நீ வாழ்க!
Oct 19, 2026,02:42 PM IST
- ஹர்ஷினியா
கல்வி,இசை,ஞானம் என
அனைத்தையும் தரும்
என் தாயே நீ வாழ்க!
இயல், இசை, நாடகம் என
மூன்றையும் இவ்வுலகிற்கு
தந்த வள்ளலே வாழ்க!
கல்வியா,செல்வமா,வீரமா
என்ற புதிருக்கு,
கல்வி இருந்தால் செல்வம், வீரம்
தானாக வரும் என்பதை
இவ்வுலகிற்கு உணர்த்தியவளே நீ வாழ்க!
நீ அமர்ந்திருக்கும் தாமரையோ வெண்மை !
இதனால் எங்கும் பரவுது
தூய்மை !
இதுவே இந்த உலகிற்கு கிடைத்த மிகப்பெரிய நன்மை !
நீ கையில் வைத்திருப்பதோ வீணை!
இதனால் எங்களுக்கு தருகிறாய் இசைத் தேனை !
ஒரு கையில் சுவடி ஓலை!
மறு கையில் ஜபமாலை!
என்ன தவம் செய்தேனோ
நான் உன்னை பாட
அறியாமை எனும் இருளை நீக்கியவளே நீ வாழ்க!
(என் பெயர் அங்காள ஹர்ஷினியா. நான் வீரமணி அவர்களின் மகள். கணிதவியல் துறையில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். எனக்கு இயற்கையை ரசிப்பதும், பயணம் செய்வதும் மிகவும் பிடிக்கும்)