சொர்க்கமே என்றாலும்.. தேனினும் இனிய தேனி!

Su.tha Arivalagan
Oct 23, 2026,04:54 PM IST

- ஹர்ஷினியா


இன்று என் பயணம்!


என்ன இதமான காலநிலை 

என்று என்னால் அறிய முடியவில்லை ! 


மலைகளின் இளவரசி 

அங்கு வெண் மேகத்தை உடையாக அணிய! 


சூரிய பகவான் அங்கு 

வெண் ஆடையின் பின் 

மறைந்து விளையாட ! 


தேனியின் மூச்சான தென்மேற்கு பருவக்காற்று என்னோடு பேச !




அங்கு அந்த பச்சை பசேல் என்று நிலத்தில் நிமிர்ந்து நின்று 

ஒன்றோடொன்று மோதி விளையாடும்

பயிர்ச் செடிகள் !


மண்ணில் விழும் சிறு மழைத்துளி 

நானும் இங்கு தான் இருக்கிறேன் 

என்று என்னோடு விளையாட ! 


இதனால் தான் தமி்ழ்நாட்டின் சொர்க்க பூமி 

தேனி

என்றாகியதோ?!


(என் பெயர் அங்காள ஹர்ஷினியா. நான் வீரமணி அவர்களின் மகள். கணிதவியல் துறையில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். எனக்கு இயற்கையை ரசிப்பதும், பயணம் செய்வதும் மிகவும் பிடிக்கும்)