செம்பருத்திப் பூவு.. அதை எடுத்து டீ போட்டு சாப்பிட்டா.. Wowww.. அப்படி சொல்வீங்க!

Su.tha Arivalagan
Jan 03, 2026,11:39 AM IST

எம். ராதிகா


ஹாய் மக்களே.. குட்மார்னிங்.. சனிக்கிழமை ஜாலியா ஆரம்பிச்சிருச்சா.. எனக்கு ஆரம்பிச்சிருச்சுங்க.


எனது ஒவ்வொரு காலைப்பொழுதும் இனிதாக செம்பருத்தி டீ உடன் துவங்குகிறது. யான் பெற்ற இன்பம் நீங்களும் பெற வேண்டாமா? இதோ உங்களுக்காக. 


வாங்க ஹைபிஸ்கஸ் டீ சாப்பிடலாம்.. அதாங்க செம்பருத்தி டீ!




ஒரு கப் டீக்கு மூன்று செம்பருத்தி பூக்கள் இருந்தால் போதும். ஒரு கப் தண்ணீரில், செம்பருத்தி பூவுடன் சிறிது மல்லி, சோம்பு, சீரகம் தட்டி போட்டு கொதிக்க விடவும். வடிகட்டி எலுமிச்சம்பழ சாறு, தேன், பனங்கல்கண்டு கலந்து குடிக்கவும். இதயத்துக்கும் செரிமானத்துக்கு மிகச் சிறந்த டீ. 


அப்றம் கொஞ்சம் டிப்ஸ் 


செம்பருத்தியுடன் துளசி, ஓமவல்லி இலைகளையும் சேர்த்து கொண்டால் குளிர் நேரத்திற்கு மிகவும் நல்லது. பூவுக்கும் இலைக்கும் நான் எங்கே போவேன் என்று கேட்பவர்களுக்கு - ஒண்ணுமே இல்லை என்றாலும் பரவாயில்லை. கடையில் இரண்டு ரூபாய்க்கு புதினா இலை வாங்கினாலே போதும். அதை போட்டு கொள்ளலாம். 


சோம்பு, சீரகம், மல்லி மூன்றையும் கரகரப்பாக அரைத்து ஒரு பாட்டிலில் வைத்து கொண்டால் வேலை சுலபம்


ஓகேங்க.. ஹாலிடேஸ் வைப் பண்ணுங்க. மீண்டும் சந்திக்கலாம்


(M.Raddhika, Freelance Content Writer, Creative Writer, Sivakasi)