மாதுளம் கனியே.. இனிப்பும் புளிப்பும் துவர்ப்பும் கலந்த முச்சுவைக் கனி.. எவ்ளோ நல்லது தெரியுமா?

Swarnalakshmi
Apr 23, 2025,12:16 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


மூன்று சுவையுடைய கனி மாதுளை. இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய முச்சுவை கனி. மாதுளம் பழத்தை அயல்நாடுகளில் சைனீஸ் ஆப்பிள் என்று அழைப்பர் பழங்களிலேயே மிகவும் பழமை வாய்ந்தது மாதுளங்கள். மிகவும் சிறப்பு வாய்ந்தது . உலகில் 720 வகைகள் மாதுளைகளில் உள்ளன.


சித்த மருத்துவத்தில் ஆறு சுவைகளில் துவர்ப்பு சுவையானது உடலை உரமாக்கும் என்று கூறுவர். இந்த மாதிரி முத்துக்கள் உண்பதால் உடல் உறுதி அடையும்.


மாதுளையின் ஊட்டச்சத்துக்கள்:


மாதுளை முத்துக்கள் ஒரு பவுலில் நூறு கிராம் எடுத்து உண்பதால் இத்தனை ஊட்டச்சத்துக்களா! வைட்டமின் சி,  வைட்டமின் கே, கலோரி, கார்போஹைட்ரேட், புரதச்சத்து, இரும்பு சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், கொழுப்பு, நார்ச்சத்து  இத்தனை சத்துக்கள் நிறைந்த மாதுளையை "சூப்பர் ஃப்ரூட்ஸ்" என்று அழைக்கின்றனர்.


மாதுளை முத்துக்கள் அற்புதமான பயன்கள்: 




முதுமையை தள்ளி போடலாம்:  மாதுளையில் 'ஆன்ட்டி ஏஜிங்' சீரம் அதன் கொட்டைகளில் இருந்து தான் தயாராகிறது. எனவே பழமாக சாப்பிட அதீத நன்மை ஆகும்.


மாதுளை   சிரப்: அயல்நாடுகளில் பிறந்த குழந்தைக்கு மாதுளை  சிரப் கொடுப்பார்கள். ஏனெனில், குழந்தையின் மூளையில் எந்த பாதிப்பும் வராமல் தடுக்க அவர்கள் இவ்வாறு கொடுப்பார்கள்.


தலை முடி வளர்ச்சி: தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தி தலையில் ரத்த ஓட்டத்தை சீராக்கும். முடி வளர இதில் உள்ள வைட்டமின் மற்றும் தனிமங்கள் உறுதுணை புரிகிறது .முடி அடர்த்திகும் பளபளப்பிற்கும் ஏதுவாகிறது.


உடல் எடை குறைக்கும்: வயிற்றில் தேவையற்ற கொழுப்புகளை நீக்கி செரிமான பிரச்சனைகளை சீராக்கி உடல் எடை குறைக்க உதவுகிறது .  கொலஸ்ட்ரால் இல்லாதது.


அல்சைமர் நோய் தடுக்கும் :  மூளையை சுறுசுறுப்பாக்கி மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் சக்தி அதிகரிக்கும் .ஞாபக சக்தி அதிகரிக்கும் . அல்சைமர் மற்றும் மூளை கட்டிகள் வராமல் தடுத்து பாதுகாக்கும்.


மன அழுத்தம் குறையும்: நைட்ரிக் ஆக்சைடு நம் உடலில் குறைந்தால் மன அழுத்தம் ஏற்படும். ஆனால் மாதுளை தினமும் சாப்பிட நைட்ரிக் ஆக்சைடு  அதிகரிக்கும். மன அழுத்தம் குறையும்


தோல் கருமையை தடுக்கும்: சூரிய வெப்பத்தால் தோல் களில் ஏற்படும் கருமையை, தோல் புற்றுநோய் தடுக்கும் . மாதுளையில் உள்ள 'எல்லஜிக்  அமிலம்'  தோல் காயங்கள், தழும்புகள்,  குணமாக்கும்


திருமணம் ஆன பெண்களுக்கு ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி கர்ப்பப்பை ஆரோக்கியமாகும். மாதுளை சாப்பிட எலும்பு வலுப்பெறும் .மூட்டு வலி மற்றும் எலும்பு தேய்மானம் வருவதை தடுக்கும். வயிற்றுப்புண் ஆறும். 


அழகு கலை: சருமத்தை பொலிவாக பராமரிக்க பழத்தோலை காய வைத்து பொடி செய்து தேன் கலந்து பேசியல் செய்ய முகம் பொலிவடையும்.


தொடர்ந்து மாதுளை சாப்பிட ரத்த அழுத்தம் குறையும். ரத்த நாளங்கள் வலு பெற்று இதயம் பலம் பெறும் .பற்கள், ஈறுகள் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அழிந்து பற்களுக்கு வலிமை அளிக்கும் .ஹைபிரிட் பழங்களை உண்பதை விட நாட்டு பழங்கள் உண்பது சிறப்பு.


மாதுளம் பழம் ,பூ, பட்டை,  பழத்தோல்  எல்லாமே மருத்துவ குணங்கள் நிறைந்தது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த மருத்துவ குணங்கள் நிறைந்த மாதுளம் பழம் ஒரு கைப்பிடி அளவாவது தினமும் சாப்பிட பழகிக் கொள்வோம். வருமுன் காத்துக் கொள்ள நல்ல தகவல் அறிந்து  கொண்டோம் ..அல்லவா? மேலும் தொடர்ந்து இருங்கள் தென் தமிழுடன். உங்கள் ஸ்வர்ணலட்சுமி.