தென்மேற்கு பருவமழை தொடங்கும் முன்பே கேரளாவில் கனமழை.. இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!
கொச்சி: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில், முன்னதாகவே கனமழை பெய்து வருகிறது.
தொடங்குகிறது. இதன் தாக்கம் தமிழ்நாடு முழுவதும் பரவ உள்ளதால், அநேக இடங்களில் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்க இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில், திருவனந்தபுரம், கொச்சி, கண்ணூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக திருச்சூரில் கனமழை பெய்த போது அதிக அளவு காற்றும் வீசியதால், கட்டடத்தின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரை ஒன்று பெயர்ந்து சாலையில் விழுந்தது.
இந்த மழை காரணமாக சாலையில் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தால், நல்வாய்ப்பாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
அதே சமயத்தில் கேரளாவை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு இல்லாத போதிலும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அரபிக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன் காரணமாக கேரளாவில் இன்று ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அப்போது 12 முதல் 20 சென்டிமீட்டர் வரையில் மழை பெய்ய கூடும் என்பதால் அப்பகுதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.