திறனறிந்து உதவி செய்!

Su.tha Arivalagan
Apr 10, 2026,02:49 PM IST

- கவிஞர் சகாய தேவி


கொடுத்து கொடுத்து சிவக்கட்டும் கைகள் 

கொடுக்க கொடுக்க பீறிடும் உற்சாகம் 

கொடுத்தல் தந்திடும்  நிம்மதியான தூக்கம் 

கொடுக்க கொடுக்க  இறையுனை நிரப்புவான் 


உதவி கரங்கள் இன்னும் நீளட்டும் 

உழைப்பின் சுகம் உலகில் பரவட்டும் 

ஊதாரித்தனமென  உலகம் சொல்லிட கூடும்  

நடுங்கும் கரங்கள் உண்மையை  உணர்த்திடும் 

நல்லது செய்ய நல்லது நடக்கும் 




உதவும் முன் உண்மை உணர்ந்து அவன் திறனறிந்து உதவிடு 

மீன் கொடுத்து வயிற்றை நிரப்புவதை விட 

மீன்பிடிக்க கற்றுக்கொடு 

பாதுகாப்பதை விட நீரில் தள்ளி நீச்சலடிக்க கற்றுக்கொடு 


அடிமட்ட மக்களை தட்டி எழுப்பிடு 

நிமிர்ந்து நடக்க சொல்லிக்கொடு 

நாளைய தலைமுறை உன் பெயர் சொல்லட்டும் 


(கவிஞர் சகாய தேவி  சகாய சாரல்கள், சென்னை)