கரூர் சம்பவம்... சிறப்பு புலனாய்வு குழு நியமனம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: கரூர் துயர சம்பவத்தில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.
தவெக தலைவரண கடந்த 27ம் தேதி கரூரில் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால், இடிபாடுகளில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 7 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் அனைத்தையும் நீதிபதிகள் இன்று ஒன்றன் பின் ஒன்றாக விசாரித்தனர்.
கரூர் சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை கோரி மனுவை விசாரித்த நீதிபதிகள், கரூர் சம்பவத்தை யாராவது நினைத்து பார்த்திருப்பார்களா? தற்போது விசாரணை ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. விசாரணையில் திருப்தி இல்லை என்றால் வேண்டுமானால் சிபிஐ.,க்கு மாற்றலாம். அதோடு சிபிஐ விசாரணை கேட்பவர் பாதிக்கப்பட்டவரா? பாதிக்கப்பட்டவர் அல்லாமல் மற்றவர்கள் சிபிஐ விசாரணை கேட்பது ஏற்புடையது அல்ல என கூறி சிபிஐ விசாரணை கோரிய மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.
இந்த நிலையில், கரூர் கூட்டநெரிசல் சம்பவம் குறித்து விசாரிக்க, வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுனை அமைத்தது சென்னை உயர்நீதிமன்றம். மேலும் வழக்கு தொடர்பான ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்க கரூர் போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.