பச்சை சன்னா, கொத்தவரங்காய் கிரேவி.. டேஸ்ட்டியானது.. ஹெல்த்தியானது.. லஞ்ச்சுக்கு பெஸ்ட் ரெசிப்பி!

Swarnalakshmi
Aug 13, 2025,11:47 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


பச்சை சன்னா, கொத்தவரங்காய் கிரேவி: (Green chickpeas,clusterbeans gravy).. இது ஒரு அட்டகாசமான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி.


சட்டென லஞ்ச் லஞ்ச் பாக்ஸ் க்கு பேக் செய்ய ஈஸியான, ருசியான  ஹெல்தியான ரெசிபி.  நாம் சென்ற பதிவில் பச்சை சன்னா கிரீன் சன்னாவின் உடைய பயன்கள் பார்த்தோம். இல்லையா ?...அதனை வைத்து ஒரு சிம்பிளான ஈஸியான ரெசிபி செய்யலாம் வாருங்கள் .. முதலில் கிச்சனுக்குள் போகலாம் ஃபிரண்ட்ஸ்...


தேவையான பொருட்கள்:




1.பச்சை சன்னா ஒரு கப் இரவு ஊற வைத்துக் கொள்ளவும்.

2. கொத்தவரங்காய் 20 நீளவாக்கில் கட் செய்யவும்.

3. தக்காளி  -2.

4. பூண்டு - 10 பல்

5. சின்ன வெங்காயம் - 6

6. சீரகம் -ஒரு ஸ்பூன்

7. பட்டை லவங்க  பூ -தலா மூன்று

8. தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்.

9. மல்லித்தூள் -2 ஸ்பூன்10.  மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் (காரம் தேவைக்கு ஏற்ப)

11. கசகசா, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள்  - தலா 1/4 ஸ்பூன்.

12. உப்பு தேவைக்கு ஏற்ப.

13. கடலை எண்ணெய் - 2 ஸ்பூன் .தாளிக்க -கடுகு, உளுத்தம் பருப்பு, 

14. கறிவேப்பிலை, மல்லித்தழை ஒரு கைப்பிடி.

15. கரம் மசாலாத்தூள் அரை ஸ்பூன் (தேவைக்கு ஏற்ப)




செய்முறை:


1.பச்சை சன்னா குக்கரில் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் விட்டு சிறிது உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்  .

2. ஒரு கடாயில் கடலை எண்ணெய் ஊற்றி (குறிப்பு :அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப  எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.) கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து , பட்டை லவங்க பூ ,பொடியாக கட் செய்த வெங்காயம், ஆறு பல் பூண்டு ,சீரகம், கொத்தவரங்காய், வேகவைத்த சன்னா, சேர்க்கவும் நன்றாக வதக்கியதும் ,அதில் மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் ,மல்லித்தூள், கரம் மசாலாத்தூள் சேர்க்கவும். உப்பு தேவைக்கு ஏற்ப சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக கிளறி விடவும்.

3. மிக்ஸியில் அரைக்க வேண்டியவை: தேங்காய் துருவல், பூண்டு 6பல்,   சீரகம், தக்காளி, மல்லித்தழை நைசாக அரைத்துக் கொள்ளவும் .இந்த அரைத்த விழுதை வாணலியில் உள்ள கலவையில் ஊற்றவும். தேவைக்கு தண்ணீர் சேர்த்து உப்பு சரிபார்த்துக் கொள்ளவும் .நன்றாக வெந்து  எண்ணெய் பிரிந்து வந்ததும் வாணலியை கீழே இறக்கி வைக்கவும். பிறகு ஒரு  சர்விங் பவுலுக்கு மாற்றவும்

4. மல்லித்தழை தூவவும்.

5. சூப்பரான ,டேஸ்டான, ஹெல்தியான ,கமகம வென   பச்சை சன்னா கொத்தவரங்காய் கிரேவி ரெடி....

6. சூடான சாதம் ,சப்பாத்தி, தோசைக்கு அருமையான சைட் டிஷ். செய்து பாருங்கள் பிரண்ட்ஸ்...


மேலும் இது போன்ற சுவாரசியமான ஹெல்தியான ரெசிபிகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.