Rathi's Kitchen: மறைந்தும் மறந்தும் போன பாரம்பரிய சத்தான சிறுபயறு குழம்பு.....!

Su.tha Arivalagan
Apr 08, 2026,04:52 PM IST

- ரதி தேவி


தென்மாவட்டத் தமிழர்கள் மற்றும் முக்கியமாக விவசாயிகளின் வீட்டில் சமைக்கும் சத்தான எளிமையான குழம்பு சிறுபயறு மற்றும் உளுந்தங்குழம்பு.....


எப்படி செய்வது ரொம்ப எளிது...


சிறுபயறைக் கடாயில் லேசாக உடைபடும் அளவுக்கு வறுக்கவும்...


பிறகு ஆறியவுடன் உடைக்கவும்.... அம்மியில் உடைப்பார்கள் இப்பொழுது மிக்ஸி தான்.. அதனால் மிக்ஸியில் லேசாக ஒரு சுற்று விட்டு உடைத்ததும் அதன் தோலை நீக்க முறம் கொண்டு புடைத்து..  பின்னர் அதனை பானையில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்...


மண் பானையில் செய்தால் சுவையாக இருக்கும்..... அதனுடன் தேவையான அளவு தக்காளி நறுக்கி போடவும்.....

தேவையான அளவு சிறிதளவு புளி சேர்க்கலாம்.. பிறகு தேவையான மசாலாவுக்கு பின்வருவனவற்றை தேவையான அளவு எடுக்கவும்...




சீரகம் 

வற்றல் காய்ந்த மிளகாய் 

பால் காயம் 

பூண்டு 

சின்ன வெங்காயம் 

தேங்காய் 

கட்டி மஞ்சள் 


இவைகளை இடித்து போடவும்.. உரலில் இடித்தால் செம்ம டேஸ்ட்.....


மிக்ஸியில் ஒரு சுற்று விட்டு எடுத்து சிறுபயறுடன் கொதிக்க விடவும்.... நன்றாக வேகும் போதே அந்த சிறுபயறு வாசனை சூப்பர்...


வெந்ததும் இறக்கி மத்து வைத்து கடையவும்.... பிறகு விருப்பத்திற்கு ஏற்ப தாளித்து இறக்கி பரிமாறவும்....


சத்தான சிறுபயறு குழம்பு ரெடி....

 

சமைத்துப் பாருங்கள் சூப்பரா இருக்கும்.....


உடல் நலத்திற்கு மிகவும் நல்லது....