பாய்ல்ட் எக் கிரேவி.. தோசைக்கு செம்ம ஜோடி.. கூட 2 சுட்டு சாப்பிடுவீங்க!

Su.tha Arivalagan
Feb 13, 2026,02:54 PM IST

- தெ.நாராயண லெட்சுமி, B.E


தோசை தேங்காய் சட்னி.. இட்லி தேங்காய் சட்னி.. இப்படியே மாத்தி மாத்தி ஒரே மாதிரி சாப்பிட்டுச் சாப்பிட்டு பலருக்கும் போரடிச்சுப் போயிருக்கும்.


சரி, காலைல என்ன டிபன்தான் பண்ணலாம் என்று யோசிக்கிறீங்களா? சாதாரண தோசையே சுட்டு சாப்பிடுங்க.. அதுக்கு சூப்பரா ஒரு மசாலா டச் கொடுத்துப் பாருங்களேன்.. செம டேஸ்ட்டியா இருக்கும்.. ரசிச்சு ருசிச்சு சாப்பிடுவீங்க.


அதுக்கு இந்த பாய்ல்ட் எக் கிரேவி செம்மையா செட் ஆகும். வீட்டுல இருக்கும் சாதாரண பொருட்களாலே, ஹோட்டல் ஸ்டைல் டேஸ்ட் கிடைக்கும். குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ரொம்ப பிடிக்கும்.


வாங்க கிச்சனுக்குள் போகலாம்.


தேவையான பொருட்கள்:



 

• முட்டை – 4 (அவித்து இரண்டாக வெட்டியது)

 • வெங்காயம் – 2 (நறுக்கியது)

 • தக்காளி – 2

 • இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன்

 • மிளகாய்தூள் – 1 டீஸ்பூன்

 • மல்லித்தூள் – 1½ டீஸ்பூன்

 • மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்

 • கரம் மசாலா – ½ டீஸ்பூன்

 • தேங்காய் விழுது அல்லது முந்திரி விழுது – 3 டேபிள்ஸ்பூன்

 • உப்பு – தேவைக்கு

 • எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

 • கருவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு


செய்வது எப்படி?




முதல்ல கடாய்ல எண்ணெய் சூடாக்கி கருவேப்பிலை போடணும். அதுக்கப்புறம் வெங்காயம் சேர்த்து நல்லா பொன்னிறமா வதக்கணும்.


இப்போ இஞ்சி பூண்டு விழுது போட்டு கச்சா வாசனை போகும் வரை கிளறணும். அடுத்து தக்காளி சேர்த்து மசியும் வரை நன்றாக வேகவிடணும்.


மஞ்சள், மிளகாய், மல்லித்தூள் எல்லாம் சேர்த்து எண்ணெய் லேசா பிரியும் வரை வதக்கணும். இப்போ தேங்காய் அல்லது முந்திரி விழுது சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி 5 நிமிஷம் கொதிக்க விடுங்க.


உப்பு சரி பார்த்து, வெட்டிய முட்டையை மெதுவா போடணும். மேலே கரம் மசாலா தூவி 3–4 நிமிஷம் சிம்மர்ல வைத்தா ரெடி.


கடைசில கொத்தமல்லி தூவினா வாசனைவே ரொம்ப சூப்பரா இருக்கும். 


காதைக் கொண்டாங்க.. குட்டி டிப்ஸ் உங்களுக்காக!


* கொஞ்சம் மிளகு தூள் சேர்த்தா ஹோட்டல் டேஸ்ட் வரும்.

* கிரேவி கெட்டியா வேணும்னா தேங்காய் விழுது கொஞ்சம் கூடுதலா போடலாம்.

* தோசை மட்டும் இல்ல, இட்லி, சப்பாத்தி, கூட சாதத்துக்கும் நல்லா போகும்.


இனிமேல் “தோசைக்கு என்ன சைடு?” ன்னு டென்ஷன் வேணாம்… இந்த பாய்ல்ட் எக் கிரேவியே போதும்!


(தெ. நாராயணலட்சுமி, ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் வசித்து வருகிறார்)