கேரளா ஸ்டைல் பப்பாளிக்காய் துவரம்!

Su.tha Arivalagan
Feb 19, 2026,12:47 PM IST

- ந. தீபலட்சுமி


பப்பாளிப் பழம் தெரியும்.. அத்தனை சத்து, அவ்வளவு டேஸ்ட்.. அதை விடுங்க.. பப்பாளிக்காய் துவரம் செஞ்சு சாப்பிட்டிருக்கீங்களா.


பப்பாளிக்காயில் செய்யப்படும் துவரன் அல்லது துவரம் கேரளா மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிகவும் பிரபலமான ஒரு சத்தான உணவு. இது சாதத்திற்கு ஒரு சிறந்த சைடு டிஷ்ஷும் கூட.. கேக்கவே சூப்பரா இருக்குல்ல.. வாங்க செஞ்சு சாப்பிட்டுப் பார்ப்போம்.. அதுக்கு முதல்ல கிச்சனுக்குள் போகணும்.




தேவையான பொருள்கள் 

 

பப்பாளிக்காய்-1

தேங்காய் துருவல்-சிறிதளவு

சீரகம்-1 தேக்கரண்டி 

பச்சை மிளகாய்-4

பூண்டு-5 பல்

காய்ந்த மிளகாய்-2

கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு-தாளிக்க 

வெங்காயம்-பொடியாக நறுக்கியது-தேவையான அளவு 

கறிவேப்பிலை-தேவையான அளவு 

சமையல் எண்ணெய்-2 தேக்கரண்டி 

உப்பு-தேவையான அளவு


செய்முறை 


மசாலா: 


சீரகம் பச்சை மிளகாய் பூண்டு தேங்காய் துருவல் ஆகியவற்றை அம்மியில் லேசாக அரைக்க வேண்டும் அம்மை இல்லாதவர்கள் மிக்சியில் லேசாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம்.


அரைத்த மசாலா வினை தனியாக வைத்துக் கொள்ளவும் 


பப்பாளிக்காயை தோலை சீவி நன்கு பொடிசாக அரிந்து கொள்ள வேண்டும். அல்லது துருவினாலும் நன்று.


பொடிசாக அரிந்த பப்பாளிக் காயை 10 நிமிடங்கள் வேக வைக்கவும். 


வெந்தபின் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் தேவையான அளவு உப்பினை சேர்த்து கிளறிவிட்டு மூடி போட்டு சிறிது நேரம் அடுப்பிலேயே வைக்கவும். 


ஐந்து நிமிடங்கள் வெந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி புதிதாக நறுக்கிய வெங்காயம் கடுகு, உளுந்து கருவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளித்து அதில் கொட்டி இறக்கி வைக்கவும். 


அவ்வளவுதான்! 


சூடான சுவையான பப்பாளி காய் துவரம் ரெடி! 


வாங்க சாப்பிடலாம்!


(ந. தீபலட்சுமி, பி.டி. ஆசிரியர், ஆங்கிலம், கிரியேட்டிவ் ரைட்டர், வேலூர்)