கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
- கலைவாணி கோபால்
கீரை என்று சொன்னாலே ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடுவார்கள் இன்றைய தலைமுறை குழந்தைகள். அவர்களும் விரும்பி உண்ணும் அளவிற்கு கீரையை வித்தியாசமாக செய்து தரலாம். எப்படி என்று பார்ப்போமா.
நாம் எந்த கீரையை பயன்படுத்துகிறோமோ அந்த கீரையை அலசி நன்கு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சிறிது கடுகு, சீரகம், பெருங்காயப்பொடி இடித்து வைத்த எட்டு பல் பூண்டி சேர்க்கவும்.
கடுகு பொரிந்து பூண்டு வதங்கியதும், நீல வாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து கோல்டன் பிரவுன் அளவிற்கு நன்கு வதக்கவும், வதங்கியதும் அதில் தேவையான அளவு தக்காளி சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
பின்பு அதனுடன் சிறிது மஞ்சள் பொடி , தேவையான அளவு காரப்பொடி போட்டு உப்பு போட்டு நன்கு கிளறவும். நன்கு வதங்கி எண்ணெய் மேலே பிரிந்ததும், சுத்தம் செய்து வைத்துள்ள கீரையை போட்டு ஒரு ஒரு சேர வெந்து வதங்கியுடன், நாம் வடித்து ஆற வைத்துள்ள சாதத்தை அதனுடன் சேர்த்து கிளறி லஞ்ச் பாக்ஸ் இல் தர, 100% குழந்தைகள் மிச்சம் இல்லாமல் சாப்பிட்டு வருவார்கள்
அதற்கு சைட் டிஷ் ஆக அப்பளமோ அல்லது சிறிய வத்தலோ கொடுத்து விடலாம்.
என்ன மம்மீஸ்.. மண்டே இதை டிரை பண்ணிப் பாருங்களேன்!
(கலைவாணி கோபால், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)