வந்தாச்சு வெயிலு.. உடல் சூட்டைக் குறைக்க கேரட் ஆனியன் தோசை.. சைட் டிஷ்.. மா இஞ்சி தேங்காய் சட்னி!

Swarnalakshmi
Feb 28, 2025,02:25 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


வெயில் காலம் ஆரம்பம் ஆகிவிட்டது இல்லைங்களா? நம் உடம்பில் சூட்டை தணிக்க கேரட் ஆனியன் தோசை அதற்கு சைட் டிஷ் ஆக மா இஞ்சி தேங்காய் சட்னி அருமையாக இருக்கும். வாங்க எப்படி? செய்யலாம் என்று பார்ப்போம்


தேவையான பொருட்கள்


தோசை மாவு ஒரு கப்

கேரட் 2 துருவிக் கொள்ளவும்

பெரிய வெங்காயம் 3 பொடியாக கட் செய்யவும்

பச்சை மிளகாய் ஒன்று பொடியாக கட் செய்யவும்

மல்லித்தழை கட் செய்தது ஒரு கைப்பிடி

நல்லெண்ணெய் தேவைக்கு ஏற்ப


செய்முறை




தோசை கல் சூடானதும் தோசை மாவு ஊற்றி அதன் மேல் துருவிய கேரட் வெங்காயம், மல்லித்தழை பச்சை மிளகாய் லேசாக அதன் மேல் தூவிக் கொள்ளவும் சிறிது எண்ணெய் ஊற்றவும். நன்றாக வெந்ததும் தோசையை திருப்பி போட்டு வெந்தவுடன் எடுக்கவும் கேரட் தீஞ்சு போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


சுவையான கேரட் ஆனியன் தோசை ரெடி. அதற்கு சைடு டிஷ் மா இஞ்சி  தேங்காய் சட்னி எப்படி ?செய்வது என்று பார்ப்போமா...


மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் ஒரு கப் ,பச்சை மிளகாய் 2  மல்லித்தழை கைப்பிடி அளவு  உப்பு, அரை கப் பொட்டுக்கடலை  ஒரு சிறிய துண்டு மா இஞ்சி தோலை சீவி கட் செய்து மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி சட்னியாக அரைக்கவும். சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.


அருமையான சுவையான மனமனக்கும் மாஇஞ்சி தேங்காய் சட்னி ரெடி. இது ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும். ஒருமுறை செய்து பாருங்களேன். 


மேலும் இதுபோன்ற சமையல் குறிப்புகளுக்கு இணைந்திடுங்கள் தென் தமிழுடன்.. உங்கள் ஸ்வர்ணலட்சுமி