Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!
Oct 04, 2026,02:21 PM IST
- கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன்
என் அன்பு சகோதர சகோதரிகளே .. அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.
இன்றைக்கு Sunday. எதாவது special ஆக சமைக்கலாம் என நினைக்கிறீங்களா? வாங்க மக்ரூனி பிரியாணி செஞ்சு சாப்பிட்டுப் பார்ப்போம். செம டேஸ்ட்டுங்க.
சரி எப்படி செய்யலாம் என பார்ப்போமா.. வாங்க கிச்சனுக்குள் போகலாம்.
தேவையான பொருட்கள்
1.மக்ரூனி (தேவையான அளவு, கால்,அரை,முக்கால் ஒருகிலோ என தேவைக்கு ஏற்ப)
2. வெங்காயம்
3.தக்காளி
4.பச்சை மிளகாய்
5.இஞ்சி
6 பூண்டு
7.கொத்தமல்லி
8.புதினா
9.கிராம்பு
10.லவங்கம்
11.பட்டை
12.எண்ணெய்
13.சிக்கன்
14.மஞ்சள்தூள்
15.மிளகாய்தூள்
16. கப்உப்பு(தேவைக்கு ஏற்ப)
17.நெய்.
18. சிக்கன் வேண்டாம் என்றால் முட்டை பயன்படுத்தலாம்
இப்போது கால் கிலோ மக்ரூனியை வைத்து பிரியாணி செய்யப் போகிறோம்.. சரியா!
வெங்காயம் சிறிய அளவு எனில் நான்கு, தக்காளி இரண்டு எடுத்து நீளவாக்கில் மெலிதாக நறுக்கிக்கொள்ளவேண்டும். மற்ற அனைத்தும் தேவைக்கு ஏற்ப எடுத்துக்கொள்ளவேண்டும், stove வில் குக்கர்வைத்து சூடேறிய உடன் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேறியதும் லவங்கம் 4,பட்டை2,ஏலக்காய் 4 சேர்த்து பின்னர் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு கிளற வேண்டும். அதைத் தொடர்ந்து தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். இவையெல்லாம் நன்றாக வதக்கியதும் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கன் (சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்) சேர்த்து அதில் மஞ்சள்தூள் ,மிளகாய் தூள் ,உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு வதக்கி பின்னர் மக்ரூனி சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
தொடர்ந்து கால் கிலோ மக்ரூனிக்கு பெரிய சில்வர் டம்ளர் 3 டம்ளர் அல்லது 1/2 லிட்டர் அல்லது தேவைக்கு ஏற்ப தண்ணீர ஊற்றி நன்கு கலந்துவிட்டு, நறுக்கிய கொத்தமல்லி ,புதினா இலை தூவி ,ருசி பார்த்து பின்னர் குக்கர் மூடியை மூடி விட வேண்டும்.
மூன்று அல்லது நான்கு விசில் வந்தபின் ஸ்டவ் ஆஃப் செய்து 5 நிமிடம் கழித்து (பிரஷர் இறங்கியதும் ) மூடியை திறக்கவும். தேவையென்றால் சுவைக்காக சிறிது நெய் சேர்க்கவும்.
அப்பப்பா ..wow...wonderful ..
கமகமக்கும் மக்ரூனி சிக்கன் பிரியாணி வாசம் இல்லம் முழுவதும் வீசும். அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொள்ளும். அம்மாவின் அன்பும் , சுவையும் வயிறை நிறைக்கும்... special sunday வாக இருக்கும்..
சமைத்து ருசியுங்கள் விடுமுறையை கொண்டாடுங்கள்.. சிக்கன் வேண்டாம் என்றால் முட்டை உடைத்து ஊற்றியும் சமைக்கலாம் ருசி அபாரமாக இருக்கும். ருசி எப்படி இருந்தது என comment box ல் பதிவிடுங்கள்.
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)