ராத்திரியானா சவுண்டு ஜாஸ்தியா இருக்கா.. குறட்டையை நிறுத்தும் இயற்கை வைத்தியம்!

Su.tha Arivalagan
Dec 30, 2025,12:59 PM IST

- கலைவாணி கோபால் 


சென்னை: ராத்திரியானால் போதும், பல வீடுகளிலும் ரஷ்யா - உக்ரைன் போர் போல ஒரே சத்தமாக இருக்கும்.. அதுதாங்க குறட்டை ஒலி. ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் கூட சகஜமாக இருக்கக் கூடிய ஒரு பிரச்சினை இந்த குறட்டை.


குறட்டைதானேன்னு சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அதிலும் கவனம் தேவை. 




குறட்டை எவ்வாறு உருவாகிறது என்றால்,... சுவாச பாதையில் இருக்கும் மென் திசுக்கள், வீக்கம் அடையும் போது நாம் சுவாசிக்கின்ற காற்று வீக்கத்தின் ஊடே செல்லும்போது ஏற்படும் அதிர்வால் குறட்டை உண்டாகிறது. இது இயற்கையானது. என்றாலும்,..... ஒரு மனிதனின் குறட்டை மற்றவருக்கு பிரச்சினையாகவே உள்ளது. பெரும்பாலும் இது குடும்பத்தில் ஒருவரின் குறட்டை அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 


ஏனென்றால் , அனைவரும் உழைத்து விட்டு  களைப்பாறுவது இரவில் மட்டுமே. அதற்கும் ஏதோ ஒரு வகையில் ஒரு சத்தம் தூக்கத்தை கலைப்பதால் அவர்களுக்கு அது மன உளைச்சலை ஏற்படுத்தும். ஒரு நாள் என்றால் பரவாயில்லை தினமும் ஏதோ ஒரு வகையில் தூக்கம் பாதிக்கப்படுவது என்பது பெரும் பிரச்சனையாகவே இருக்கும். அதை தீர்க்க இயற்கையை ஒரு வழி வகுத்துள்ளது.. நமக்கு


இதை எவ்வாறு இயற்கை முறையில் தடுத்து நிறுத்தலாம் 


முதலில் ஒரு டம்ளர் தண்ணீர் நன்றாக கொதிக்க விட்டு, பின்பு அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் ஒரு ஏலக்காய் தட்டி போட்டு, 100 கிராம் அளவுக்கு தண்ணீர் 50  மில்லிகிராம் அளவு வந்தவுடன் அதை வடிகட்டி அதில் தேன் சேர்த்து தினமும் அருந்த திசுக்களின் வீக்கம் குறைந்த நாளடைவில் குறட்டை சத்தம் ஏற்படாமல் குறையும். மேலும் இந்த தண்ணீரை தினமும் அருந்தி வருவதால் உடலில் ஏற்படும் சளி பிரச்சனையும் தீர்வு.... ஏற்பட்டு நல்ல பலனை தரும்.


செஞ்சு பாருங்க.. கூடவே உரிய மருத்துவ ஆலோசனைகளையும் தவறாமல் பெற்று அதையும் பின்பற்றுங்கள்.


(கலைவாணி கோபால், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)