மனிதநேயம் தமிழனின் அடையாளம்

Su.tha Arivalagan
Jan 10, 2026,10:50 AM IST

- பா. பானுமதி


மனித நேயமே தரணியில் தமிழனின் அடையாளம் 

மரத்தையும் சகோதரியாய் பார்த்தது 

சங்ககால மனிதநேயம் 

காக்கை குருவி எங்கள் ஜாதி என்றது 

பாரதியின் மனித நேயம் 

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றது

வள்ளலாரின் மனித நேயம் 

தன்னைப் போல பிறரை எண்ணும் நற்பண்பே மனிதநேயம்

வாழை போல தன்னை ஈந்தும் மனிதநேயம்

தமிழனின் அடையாளம் 




வந்தாரை வாழ வைக்கும் மனிதநேயமே 

தமிழர் பண்பாடு 

மனிதம் இல்லாதவன் மரம் என வள்ளுவன் சொன்னது 

தமிழன் அடையாளம் 

மனிதநேயம் இங்கு பூத்துக் குலுங்குவதே 

மாநிலத்தின் அடையாளம் 

போர் விதிகளிலும் மனித நேயத்தை கடைப்பிடித்தது

தமிழன் அடையாளம் 

மனிதத்தை மண்ணில் விதைத்து விண்ணிற்கும் கொண்டு செல்வதே 

தமிழன் அடையாளம் 

தனி மனிதனுக்கு உணவு இல்லை எனில் ஜகத்தை அழிக்கும் தமிழன் அடையாளம் 

யாதும் ஊரே யாவரும் கேளிர் என ஐநாவில் பொறித்த 

அற்புதமான தமிழ் வாசகங்களே 

தமிழர்களின் மனிதத்திற்கு அடையாளம்