யாரையும் காலி பண்ண வரவில்லை.. நல்ல விஷயங்களைச் செய்யவே வந்திருக்கிறேன்.. சிவகார்த்திகேயன்

Meenakshi
Feb 24, 2026,01:56 PM IST

சென்னை:  நான் யாருக்கும் போட்டியாகவோ, யாரையும் காலி பண்ணவோ வரவில்லை. எனக்கு கிடைத்த வாய்ப்பை வைத்து நல்ல விஷயங்களைச் செய்ய நினைக்கிறேன் என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


சிவகார்த்திகேயன் மற்றும் சுதன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தாய் கிழவி. சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார், சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிப்ரவரி 27-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் படக்குழுவினர்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு சிவகார்த்திகேயன் பேசுகையில், 




நாங்கள் எல்லோரும் ஒரு கனவுடன் தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். நான் ஆசையோடு இந்தத் துறைக்கு வந்திருக்கிறேன். நிறைய பேருக்கு கிடைக்காத வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த வாழ்க்கையை அர்த்தமுள்ள ஒன்றாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். இதுவரை ரீமேக் படங்கள் செய்ததில்லை, கதை கேட்டு படங்கள் பண்ணுகிறேன். எனது படங்கள் வெற்றி, தோல்விக்கு நான் பொறுப்பு என நம்புகிறேன்.


நான் யாருக்கும் போட்டியாகவோ, யாரையும் காலி பண்ணவோ வரவில்லை. எனக்கு கிடைத்த வாய்ப்பை வைத்து நல்ல விஷயங்களைச் செய்ய நினைக்கிறேன். மக்கள் ஆரம்பத்தில் இருந்து எனக்கு சப்போர்ட் செய்து வருகிறார்கள். திருச்சியில் இருந்து வந்த ஒருவனை இங்கு கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் இண்டஸ்ட்ரியில் இருக்கும் சிலர் தான் தடைகளைப் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதைத் தாண்டி வர நான் தயாராகத்தான் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.