உச்சத்தின் எச்சம்!

Su.tha Arivalagan
Apr 08, 2026,01:58 PM IST

- சரண்யா.செள


எச்சம் (முழுமை பெறாதவை)


தாயாக உச்சம்

தாய்நாடாக உச்சம்

தாய்மொழியாக உச்சம்

பெண்தெய்வமாக உச்சம்


உச்சம்:


தியாகத்தின் உச்சம்

தன்னம்பிக்கையின் உச்சம்

கல்வியில் உச்சம்

பணியில் உச்சம்

குடும்பத்தலைவியாய் உச்சம்

அனைத்திலும் உச்சம்

பார் போற்றும் உச்சமே

உனக்குள் நோக்கி நிற்கும்......

எச்சங்கள் ஏராளம்.




நிகர்:


ஆணுக்கு நிகர் பெண் —

ஏன் இந்த நிகர்?

பெண்ணுக்கு நிகர் ஆண் —

வேண்டும் இந்த நிகர்.....


சுதந்திரம்:


கட்டுப்பாட்டிற்குள் இருப்பவர்களுக்கு தானே சுதந்திரம்.

சுதந்திரம் என்ற வார்த்தையினுள் கட்டுப்பட்டிருக்கிறோம் பெண்கள்.

வேண்டாம் சுதந்திரம்....

தன் இயல்பினுள் சிக்கிக்கொள்ள ஆசை.


காலம்


இறந்தகாலம் வேண்டாம்

எதிர்காலம் வேண்டாம்

நிகழ்காலத்தில் வாழ்ந்துவிட ஆசை

உச்சமாக, நிகராக, சுதந்திர வார்த்தை அல்லாத

வாழ்க்கை வாழ்ந்திட.


(சரண்யா. சௌ, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மஞ்சாக்குப்பம், பூண்டி ஒன்றியம்)