திமுகவினர் இப்படி ஏமாத்துவார்கள் என்று தெரியாது: மகளிர் தின வாழ்த்தில் விஜய் தாக்கு!

Meenakshi
Mar 08, 2025,06:15 PM IST

சென்னை:  பாதுகாப்பாக இருக்கும் போது தான் சந்தோஷமாக இருக்க முடியும். அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாத போது சந்தோஷம் இருக்காது தானே. அப்படி நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. என்ன செய்ய  இப்படி நம்மை ஏமாற்றுவார்கள் என்று தெரியாது. நீங்க நாங்க எல்லாரும் சேர்ந்து தானே இந்த திமுக அரசை தேர்தெடுத்தோம் என்று மகளிர் தினத்தில் திமுகவை நேரடியாக தாக்கிப்பேசியுள்ளார் தவெக கட்சி தலைவர் விஜய்.


இன்று உலகம் முழுவதிலும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை முன்னிட்டு பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் நேற்றில் இருந்தே தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஓர் ஆண்டிற்கு முன்னர் கட்சி ஆரம்பித்த தவெக தலைவர் விஜய் இன்று தனது மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். வழக்கமாக எக்ஸ் தளத்தில் வாழ்த்துக்களை பதிவாக வெளியிட்டு வந்த விஜய் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 




மகளிர் தின வாழ்த்துக்களுடன், இதுவரைக்கு எந்த கட்சியின் பெயரையும் நேரடியாக சொல்லி விமர்சிக்காத விஜய் இன்று நேரடியாக திமுக கட்சியின் பெயரை சொல்லி தாக்கிப் பேசியுள்ளார். அதுமட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டி ஆர்ப்பாட்டம் நடத்துமாறு மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் விஜய்.


இந்நிலையில், மகளிர் தினம் குறித்து விஜய் வெளிட்ட விடியோவில், எல்லோருக்கும் வணக்கம் இன்று மகளிர் தினம். தமிழ்நாடு முழுவதும் இருக்கிற எனது அம்மா, அக்கா, தங்கை, தோழி என்று நினைத்து உங்கள் அத்தனை பேருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள். உங்களுக்கு எல்லாம் வாழ்த்து சொல்லாமல் இருக்க முடியாது. உங்கள் அனைவருக்கும் எனது மகளிர் தின வாழ்த்துக்கள். சந்தோசம் தானே. பாதுகாப்பாக இருக்கும் போது தான் சந்தோஷமாக இருக்க முடியும். அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாத போது சந்தோஷம் இருக்காது தானே. 


அப்படி நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. என்ன செய்ய  இப்படி நம்மை ஏமாற்றுவார்கள் என்று தெரியாது. நீங்க நாங்க எல்லாரும் சேர்ந்து தானே இந்த திமுக அரசை தேர்தெடுத்தோம். எல்லாமே இங்க மாறக்கூடியது தானே. மாற்றத்துக்கு உரியதுதானே. கவலைப்படாதீங்க. இந்த 2026 ஆம் ஆண்டு நீங்க நான் எல்லாரும் சேர்ந்து பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய திமுகவை மாற்றவும், அதற்கு மகளிர் தினம் ஆனா இன்று நாம் எல்லோரும் சேர்ந்து உறுதி ஏற்போம். உங்களுடைய எல்லா சூழ்நிலையிலும் ஒரு மகனாக, அண்ணனாக, தந்தையாக, தோழனாக நான் உங்களுடன் நிற்பேன். நன்றி வணக்கம் என்று கூறியுள்ளார்.