விஜய்யின் கடைசிப்படம் ஜனநாயகன் என்பதை நான் நம்பவில்லை: தமிழிசை செளந்தரராஜன்
சென்னை: ஜனநாயகன் படம் தான் விஜய்யின் கடைசி படம் என்பதை நான் நம்பவில்லை என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று தனது இல்லத்தில் பாஜகவினரோடு இணைந்து முருகன் படத்திற்கு விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் பாடிய தமிழிசை சௌந்தரராஜன். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், தமிழக அரசியலில் நடிகர்கள் ஒரு பெரிய கனவுடன் வருவது வழக்கம். ஆனால், நிஜ அரசியல் களத்தில் அந்த திட்டங்கள் தோல்வியடையும் போது அவர்கள் மீண்டும் திரையுலகிற்கே திரும்பிவிடுவார்கள்.
அரசியல் கனவு நனவாகவில்லை என்றால் நடிகர்கள் கேமரா முன்னால் சென்றுவிடுவது தான் தமிழகத்தின் வரலாறு. விஜய்யின் நிலையும் அதுவாகத்தான் இருக்கும். இன்று கடைசி படம் என்பது நாளை முதல் படமாக மாறும். சென்சாருக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அது ஒரு தனித்துறை. நான் விசாரித்த போது சில இடங்களை சென்சார் துறையினர் நீக்க சொல்லியிருக்கலாம். அதை அவர்கள் நீக்காமல் இருந்ததினால் தாமதமாகி, கோட்டுக்கு போகியிருக்கலாம் என்றனர். ஆனால் பாரதிய ஜனதா கட்சிக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
அரசியலில் போட்டி என்பதற்காக சினிமாவில் அரசியல் செய்கின்றனர். பராசக்தி இந்தி திணிப்பதற்கு எதிரான கதை. நாங்கள் எல்லாரும் இந்தி திணிப்பிற்கு எதிரானவர்கள் தான். அப்படி என்றால் காங்கிரஸ்சை துறத்தி விட்டு தான் பராசக்தியை வெளியிட வேண்டும். டெல்லி மட்டும் இந்தியா இல்லை. தமிழ்நாடு தனி நாடு என்ற நிலை அடைந்து விடக்கூடாது என்ற நிலை வந்துவிடக்கூடாது. கருவறையை கல்லறையோடு ஒப்பிடுகிறார் என்றால் அவர் மனதில் எந்தளவுக்கு இந்துக்கள் மீது பெறுப்புணர்வு இருக்கும்?. இதற்காகவே இந்துக்கள் அவருக்கு ஓட்டு போடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.