கனாக் கண்டேனடி தோழி!

Su.tha Arivalagan
May 21, 2026,04:01 PM IST

- பாவலர் மாயோன்மங்கை, பொள்ளாச்சி


என்னவளே ஏந்திழையே

எல்லோராக்

குகையழகே


கயலொத்த

கண்ணுனதே

வயற்சேற்றில்

துள்ளுதுவே


செவ்விதழில்

தேன்சிந்த

செண்பக

மணமடிக்க


தென்னைமரக்

கீற்றசைந்து

முவ்தானை

எனையுரச





மனமெங்கும்

மத்தாப்பு

வனமெல்லாம்

மரிக்கொழுந்து


என்னை

உவந்தேன்

விண்ணில்

மிதந்தேன்


எட்டித்தான்

கைப்பிடித்தேன்

எட்டவில்லை

பட்டுப்பூச்சி


விடுவேனா

வியப்பவளை

விட்டியாய்ப்

பின்தொடர


படுகுழியில்

பாதம் விழ

நடுநிசியில்

கூச்சலிட


படுக்கையிலே

மனைவியவள்

பார்வையிலே

வியர்த்தேனே