Tamil Poem: இளமையும் காலமும்!

Su.tha Arivalagan
Jun 15, 2026,03:39 PM IST

- தமிழ்மாமணி இரா. கலைச்செல்வி


இளமையும்  காலமும் ஒன்று .

இரண்டும் போனால் திரும்பாது.


காலத்தை இறுக்கி பிடித்தாலும் ,

காலம் சென்ற திசையில் திரும்பா.!


இழந்த செல்வத்தை மீட்கலாம்.

இழந்த இளமையை மீட்க முடியாது.




காலம் பொன் போன்றது அல்ல, 

காலம் உன் உயிர்  போன்றது. 


பொன்னை இழந்தால்  மீட்கலாம்.

உயிரை இழந்தால் மீட்க முடியாது.


ஓடும் நதியாய் காலம் நகர,

ஒடுங்கி போகும்  உந்தன் இளமை!


நேற்று நிழல். நாளை கனா.!

இன்று  மட்டுமே உன் கையில்.!


ஓடும் ஒவ்வொரு நொடியையும் 

ஒப்பற்றதாக மாற்றி வாழுங்கள்."


(எழுத்தாளர் பற்றி ... சிவகங்கையைச் சேர்ந்த  எழுத்தாளர் இரா.  கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக்  காதல் கொண்ட அவர்,  நீண்ட  காலமாக  எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர,  கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர் . சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை,  சேவா ரத்னா , கவிஞாயிறு,  கவியருவி, கவிச்செம்மல்,  உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது ‌ போன்ற 15 ‌க்கும் மேற்பட்ட  விருதுகளையும் அவர்  பெற்றுள்ளார்.)