இல்லம் தேடி கல்வி வெற்றி கதை.. ஒரு ஆசிரியையின் நேரடி அனுபவ ரிப்போர்ட்!

Su.tha Arivalagan
Oct 09, 2025,05:13 PM IST

- மஞ்சுளா


2021ஆம் ஆண்டு உலகையே உலுக்கிய கொரோனா வந்தது. அந்த நோயால் பலர் இறந்தனர். உலகம் முழுவதும் அரசுகள் ஸ்தம்பித்தன, அரசுத் துறைகள் செயலிழந்தன, மக்கள் வீடுகளில் முடங்கினர். இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு துறைதான் கல்வித்துறை, கொரோனா என்கின்ற நோய் வந்ததால் பள்ளிகள் மூடப்பட்டன. குழந்தைகள் மிகவும் பாதிப்படைந்தனர்.


ஒன்றாம் வகுப்பு போக வேண்டிய குழந்தைகள் பள்ளிக்குப் போக முடியாத நிலை வந்தது. மாதக்கணக்கில் வீட்டோடு முடங்கியதால், அவர்களுக்கு பள்ளி என்றால் என்னவென்றே தெரியாமல் போய்விட்டது. இரண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் மூன்றாம் வகுப்புக்கு போக வேண்டிய சூழ்நிலை கொரோனாவினால் ஏற்பட்டது. கற்றல் இழப்பு வந்து விட்டது. ஆதலால் எழுத்துக்கள் தெரியாமலும், எண்கள் தெரியாமலும், வாசிப்பு தெரியாமலும் போய்விட்டது.




அதை சரிசெய்ய கொண்டு தமிழ்நாடு அரசு கொண்டு வந்த திட்டம்தான் இல்லம் தேடி கல்வி திட்டம். இத்திட்டத்தின் மூலம் நான் சேர்ந்து என்னுடைய சேவையை சேவை மனப்பான்மையுடன் மற்றும் மகிழ்ச்சியுடன் 3 ஆண்டுகளாக கற்றல் கற்பித்தல் பணியை ஆற்றி வருகிறேன்.


என் பெயர் J. மஞ்சுளா எம்.ஏ., எம்.ஃபில்,  சென்னை கே.கே.நகரில் வசித்து வருகிறேன். நான் கடந்த 20 வருடமாக ஒரு தனியார் பள்ளியில் என்னுடைய சேவையை ஆற்றினேன். இப்பொழுது கொரோனா காலத்தில் கூடுதலாக என்னுடைய சேவையை சென்னை தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில் எனது பங்களிப்பை ஆற்றி வருகிறேன். 


தினமும் 30 மாணவர்களுக்குப் போதனை




தினமும் 30 மாணவர்கள், எனது மையத்துக்கு வந்துவிடுவார்கள், அவர்கள் தினமும் வாசித்தல், விளையாடுவது, கதை சொல்வது எல்லாம் மன மகிழ்ச்சியுடன் கற்றுக் கொள்வார்கள்.  என்னுடைய இல்லம் தேடி கல்வி மைய குழந்தைகள் மாரத்தான் போட்டியில் அனைவரும் பங்கு செய்ய வேண்டுமென விரும்பினேன். அனைவரும் தினமும் வீட்டிற்குஎன்னுடைய அலைபேசியை கொடுத்து வாசிக்க வைத்தேன்.


கடந்த ஜூன் 5ஆம் தேதி சுற்றுசூழல் தினத்தன்று பள்ளி குழந்தைகளை பள்ளிகரணை அழைத்துக் கொண்டு போனேன். உயர் தொடக்க நிலை குழந்தைகளின் பெற்றோர்களை அழைத்து கொண்டு போனேன்.  அதில் ஒரு அனுபவம் கிடைத்தது.


தலைமை ஆசிரியர் என்னிடம், மஞ்சுளா, சுதர்சன் என்ற பையன் வருவாமா அவன கொஞ்சம் கூட்டிட்டு உட்கார வைத்து நன்றாக சொல்லிக் கொடும்மா அப்பா இல்லாத புள்ள கொஞ்சம் நல்லா கவனிச்சுக்கோ அவங்க உங்ககிட்ட விடுவதற்கு அவங்க பாட்டி ரொம்ப விருப்பப்படுறாங்க என்றார். இப்படித்தான் ஒவ்வொருவரையும் பார்த்துப் பார்த்து நாங்கள் இங்கு கவனிக்கிறோம்.


குழந்தைகள் மையத்தில் பயம் இல்லாமல் அனைத்தையும் தெளிவாக கேட்டு பயன்பெறுகிறார்கள். கற்றலில் மிகவும் பின் தங்கிய குழந்தைகள் பலன் அடைகிறார்கள். நன்றாக படிக்கும் கூடுதல் பலன் அடைகிறார்கள். கடந்த இரண்டு வருடமாக தொடக்க நிலை மற்றும் உயர் தொடக்க நிலை பிள்ளைகளுக்கும் என்னுடைய கற்றல் சேவையை ஆற்றினேன். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியில் சென்னை தொடக்கப்பள்ளி அசோக் நகர் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


கடந்த 2 வருடமாக உயர் தொடக்க நிலை குழந்தைகளுக்கும் கற்றல் மற்றும் கற்பித்தல் சேவையை ஆற்றினேன். கடந்த 2 வருடமாக உயர் தொடக்க நிலை குழந்தைகளுக்கு மடிக்கணினி மூலமும், காணொளி மூலமும் கற்பித்தேன். பள்ளிக் குழந்தைகளை OMR BOOK FAIR-க்கு அழைத்துக் கொண்டு போனேன். படிக்கும் ஆர்வம் அதிகரிக்கவும், பேச்சாற்றலை வளர்க்கவும், பேச்சாளர்களாக வருவதற்கும், நன்றாக வாசிக்கவும் அழைத்து கொண்டு போனேன்.




வடபழனியில் குழந்தைகளுக்காக மந்திரமா தந்திரமா நிகழ்ச்சிக்கு அழைத்து கொண்டு போனேன். நல்ல சமூகம் அமைக்க இணையுங்கள் India United-இல் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சியில் குழந்தைகளை பங்கு பெற வைத்தேன். மூட நம்பிக்கைகள் பற்றியும், மாயாஜாலம் பற்றியும் எல்லாவற்றையும் கண்டு களித்தனர். குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வாங்கி கொடுத்தேன்.


எங்களுடைய பள்ளி மேலாண்மை குழு ஸ்ரீவித்யா இதுகுறித்துக் கூறுகையில், நான் பள்ளி மேலாண்மை குழுவில் உறுப்பினராக உள்ளேன். முன்னால் அரசுப்பள்ளி மாணவி. மஞ்சு மேடம் மையத்துக்கு என்னுடைய பிள்ளைகளை அனுப்புகிறேன். தவறாமல் அனுப்புகிறேன். அவர்கள் பலன் அடைந்து வருகின்றனர் என்றார். 


ஆயிரமாயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா


ஆயிரமாயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாவிற்க்கு தொடக்கநிலை மற்றும் உயர் நிலை தொடக்க நிலைக்கு பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து கொண்டு போனேன். குழந்தைகளின் அறிவியல் சிந்தனையை தூண்டுவதற்கும், அறிவியல் மனப்பான்மை வளர்ப்பதற்கும், அறிவியல் வளர்ச்சியை மேன்மைப்படுத்தவும் அழைத்து கொண்டு போனேன்

 

கோடம்பாக்கம் ஒன்றியம் சார்பாக சென்னை தீவுத்திடல் பொருட்காட்சியில் கலந்து கொண்டேன். ரூ.3500/- TLM வாங்கி என்னுடைய ஸ்டாலை காட்சிப்படுத்தினேன். மாணவ மாணவிகளுக்கு துளிர் திறனறிதல் தேர்வு நடத்தினோம். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஏற்பாடு செய்தது. மாணவ மாணவிகளின் அறிவியல் சிந்தனையை தூண்டுவதற்கும், அறிவியல் மனப்பாண்மை வளர்ப்பதற்கும் அவர்களுக்கு உதவியாக இருந்தது.




என்னுடைய விருப்பத்தின் அடிப்படையில் எழுதப் படிக்க தெரியாத மக்களை எழுதப் படிக்க சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு எழுதவும், படிக்கவும் வைத்தோம். எழுதப் படிக்க தெரியாத மக்களை வீ திவீ தியாககண்டுபிடித்து பள்ளிக்கு வர சொல்லி எழுதப் படிக்க கற்றுக் கொடுத்தோம். 


இந்த இல்லம் தேடி கல்வி திட்டத்தால் தன்னார்வலர்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் பயன் அடைந்து வருகின்றன. கல்வியில் பின் தங்கிய பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளும் பயன் அடைந்து வருகிறார்கள். கடந்த 3 வருடங்களாக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் குழந்தைகளுக்கு மனமகிழ்ச்சியுடனும், அர்ப்பணிப்புடனும் எனது சேவையை, பங்களிப்பை ஆற்றி வருகிறேன்.


இல்லம் தேடி கல்வி திட்டம் அற்புதமானது.. இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்வது அவசியம் என்றார் மஞ்சுளா.