Real Life Dragon: டிராகன் பட பாணியில் விர்சுவல் இண்டர்வியூவில் ஆள்மாறாட்டம்!
ஐதராபாத் : இன்போஸிஸில் கிடைத்த வேலையை தக்கவைக்க டிராகன் படம்போல விர்ச்சுவல் இண்டர்வியூவில் ஆள்மாறாட்டம் செய்த மென்பொறியாளர் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.
டிராகன் பட பாணியில் தனது நண்பர்கள் மூலம் ஆள்மாறாட்டம் செய்து ராபா சாய் பிரசாந்த் இன்போஸிஸில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இவருக்கு வயது 20. கிடைத்த வேலையை தக்கவைக்க டிராகன் படம்போல விர்ச்சுவல் இண்டர்வியூவில் ஆள்மாறாட்டம் செய்து ராபா சாய் பிரசாந்த் பணியில் சேர்ந்துள்ளார்.
பணியில் சேர்ந்து 15 நாட்கள் ஆன பின்னர் அவரது திறன் மற்றும் பேச்சில் சில மாற்றங்கள் தென்பட்டுள்ளது. இன்டர்வியூவில் ராபா சாய் பிரசாந்த ஆங்கிலத்தில் சரளமாக பேசியுள்ளார். ஆனால் பணியின் போது தடுமாற்றத்துடன் பேசியுள்ளார். இவர் மேல் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் நிறுவனத்தினர் ஆராய்ந்து பார்த்ததில் விர்ச்சுவல் இண்டர்வியூவில் ஆள்மாறாட்டம் செய்தது அம்பலமானது.
ஆன்லைன் இன்டர்வியூவில் இருந்தவரும், இவரும் வேறு வேறு நபர்கள் என தெரியவந்ததால் காவல்நிலையத்தில் இன்போஸிஸ் நிறுவனத்தினர் புகார் அளித்தனர். இப்புகாரின் பேரில், ராபா சாய் பிரசாந்த்தின் மீது 2 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் வேலை பார்த்த 15 நாட்களின் சம்பளத்தை தனக்கு வழங்க வேண்டும் என்று ராபா சாய் பிரசாந்த் நிறுவனத்திடம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.