தேடுகிறேன் நல்ல மனிதர்களை
Dec 20, 2025,03:57 PM IST
- இரா.காயத்ரி
உணவுப் பொருட்டிகளில் சிறு கற்களா
சல்லடைக் கொண்டு சலித்திடுவோம் அல்லவா
மனிதர்கள் மனங்களை உணர ஏதேனும் உள்ளதா
தேடுகிறேன் மனிதர்களை , அவர்களில் நல்லவர்களை
நிறம் மாறும் பூக்கள் உண்டு
நிறம் மாறும் மனிதர்களைக் கண்டு
மனம் வருந்தி நின்ற படி
மனிதர்களை தேடுகிறேன் மௌனத்தில் ஆழ்ந்தபடி
விசித்திரமான உலகில் எதார்த்தங்களை மறந்து
வித்தியாசமாக கைப்பேசியில் கண்களை கவர்ந்து
அக்கம் பக்கம் என்ன நடக்கிறது
அதை கூட தெரியாமல் கடந்து
உறவுகளோடு உதடுகள் உறவாட மறந்து
ஊர்பேர் தெரியாத எவரைப்பற்றியோ அறிந்து
இதெல்லாம் பழக்கப்படாத மனிதர்களை தேடுகிறேன்
இருந்தால் சொல்லுங்கள் இருகரம் கூப்பி வணங்குகிறேன்.
(இரா.காயத்ரி, ஆசிரியர், தருமபுரி மாவட்டம், கிரியேட்டிவ் ரைட்டர்ஸ் குழுமத்தில் கலந்து கொண்டு எழுதுகிறார்)