தமிழகத்தில்.. இன்று முதல் 20ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் கன மழை வாய்ப்பு.. சென்னை வானிலை மையம்!

Manjula Devi
May 17, 2025,05:13 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் தேதி 20 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் கடந்த 13ஆம் தேதி வாக்கில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பருவ மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் நேற்று மழை பெய்தது.


இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டலக் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 20 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,




இன்று கனமழை:


தஞ்சாவூர், திருவாரூர்,  நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.


நாளை கன மழை:


தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர்,பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.


நாளை மறுநாள் கனமழை: 


கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. 


20ஆம் தேதி கனமழை: 


கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில்  கனமழைக்கு வாய்ப்புள்ளது.



மிதமான மழை: 


தமிழகத்தில் இன்று முதல் 20 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 


சென்னை மழை:


சென்னையில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது.