வாழ்வில்....!
Jan 14, 2026,12:14 PM IST
பா.பானுமதி
ஆசையும் அச்சமும் பின்னிப்பிணைந்து
அலைக்கழிக்கும்
ஓசையில்லா உலகம் தேடும் போது
பாஷை புரியாமல் பரிதவிக்கும்
நிராசைகள் நித்தம் ஏற்படும் போது
ஓ..ராசையும் உயிர் பெறாது
அச்சம் விட்டு அகலக்கால் வைத்தால்
சொச்சமும் போய்விடும்
உச்சத்தில் நின்று சட்டமாய் பேசினால்
மிச்சம் காணாது
பசை போட்டு ஒட்டிய பேராசைகள் பிணைந்து
இசையும் கசையடியாகும்
அசை போட்டு பார்த்தால் அனைத்தும் மாறிவிடும்
நிலையற்ற தன்மை நெஞ்சம் மறந்துவிடும்
இன்பமும் துன்பமும் ஒன்றே தான்
எதுவும் நிலைப்பதில்லை
சிலையாக நிற்க பழகினால்
விலையாக எதுவும் கொடுக்காமல் வீணாக ஏதும் படிக்காமல்
ஆசைகள் மீறினால் அச்சம் தாக்கும்
ஓரளவுக்கு தேறினால் துச்சம் ஆக்கும்
ஆலமரம் ஆனாலும் புயலுக்கு தாங்காது
அசையும் நாணல் புயலுக்கு நீங்காது