ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம், தனி நபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை!
Feb 01, 2026,01:45 PM IST
டெல்லி: மத்திய பட்ஜெட் தாக்கலின்போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்தார்.
வருமான வரி தொடர்பான முக்கிய பட்ஜெட் அறிவிப்புகள்
ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமலுக்கு வருகிறது.
வருமான வரி தாக்கல் மற்றும் திருத்தங்கள்
ITR-1 மற்றும் ITR-2 படிவங்களைப் பயன்படுத்துபவர்கள், தங்களது வரித் தாக்கல் படிவங்களை ஜூலை 31 வரை சமர்ப்பிக்கலாம்.
குறைந்தபட்ச கட்டணத்தைச் செலுத்தி, தாக்கல் செய்த வரிப் படிவங்களில் உள்ள பிழைகளைத் திருத்துவதற்கு (Revised Returns) கூடுதல் கால அவகாசம் வழங்கப்படும். மார்ச் 31ம் தேதி வரை அதைத் தாக்கல் செய்யலாம்.
டிடிஎஸ் விகிதம் குறைப்பு
வருமான வரித் தாக்கல் நடைமுறை எளிமையாக்கப்படும். வெளிநாட்டு பயணத் திட்டங்களுக்கான டிசிஎஸ் வரி 20 % லிருந்து 2 % ஆக குறைக்கப்பட்டுள்ளது.
வருமானம் குறித்த தவறான தகவல்களுக்கு 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.
வரி பிடித்தத்தில் தளர்வு
வருமான வரி பிடித்தம் தொடர்பான விதிகளில் தளர்வு. மருத்துவ கல்வி கடனுக்கான வரி 5%லிருந்து 2% ஆக குறைப்பு
சுற்றுலா வரி பிடித்தம் குறைப்பு
வெளிநாட்டு சுற்றுலா வரி பிடித்தம் 20% லிருந்து 2% ஆக குறைப்பு.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாய்ப்பு
வெளிநாடு வாழ் இந்தியர்கள் சொத்து கணக்கை காட்ட வாய்ப்பு அளிக்கப்படும். 6 மாதங்களுக்குள் சொத்து கணக்கை தாக்கல் செய்வதற்கு புதிய திட்டம்.
டேட்டா மையங்களுக்கு வரிச் சலுகை
இந்தியாவில் தரவு மையங்களை அமைத்து கிளவுட் சேவைகளை வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 2047-ஆம் ஆண்டு வரை வரி விடுமுறை வழங்கப்படும்.
ஐடி சேவைகளுக்கான 'Safe Harbour' வரம்பு:
தகவல் தொழில்நுட்பச் சேவைகளுக்கான 'Safe Harbour' வரம்பு ரூ. 300 கோடியிலிருந்து ரூ. 2,000 கோடியாக உயர்த்தப்படும்.
தகவல் தொழில்நுட்ப சேவைகள் அனைத்தும் ஒரே பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டு, அவற்றுக்கான பொதுவான 'Safe Harbour' லாப வரம்பு 15.5% ஆக நிர்ணயிக்கப்படும்.
கூட்டுறவு சங்கங்கள்:
கூட்டுறவு சங்கங்களுக்கு இடையிலான ஈவுத்தொகை வருமானத்தை, புதிய வரி முறையின் கீழ் கழிவாகப் பெற்றுக்கொள்ளலாம்.
வருமான வரிச் சட்டச் சீரமைப்பு:
வருமான வரிச் சட்டத்தில் உள்ள குற்றவியல் நடவடிக்கைகள் தொடர்பான விதிகளை முறைப்படுத்த முன்மொழிவு.
வெளிநாடு வாழ் இந்தியர் சொத்து விற்பனை:
ஒரு வெளிநாடு வாழ் இந்தியரிடமிருந்து அசையாச் சொத்தை வாங்கும் போது, அந்தச் சொத்தை வாங்கும் இந்தியக் குடிமகனிடமிருந்து அதற்கான டிடிஎஸ் பிடிக்கப்படும்.
தணிக்கை செய்யத் தேவையில்லாத வணிக நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் தங்களது வரித் தாக்கல் படிவங்களைச் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 31 வரை அவகாசம் அளிக்கப்படும்.
வரி குற்றங்களுக்கு தண்டனை குறைப்பு
வரி சார்ந்த குற்றங்களுக்கான அதிபட்ச தண்டனை 2 ஆண்டுகளாக குறைப்பு. வருமான வரி தொடர்பான சிறு குற்றங்கள் கிரிமினல் குற்றங்கள் ஆகாது.
காலணி ஏற்றுமதியாளர்களுக்கு சலுகை
காலணிகள் ஏற்றுமதி செய்வோருக்கு மூலப் பொருட்களை வரி இல்லாமல் இறக்குமதி செய்ய சலுகை.
லித்தியம் பேட்டரி இறக்குமதிக்கு வரி இல்லை
மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக லித்தியம் பேட்டரி இறக்குமதிக்கு வரி இல்லை.
புற்றுநோய் மருந்துகளுக்கு வரி குறைப்பு
புற்றுநோய் மருந்துகளுக்கு இறக்குமதி வரி குறைப்பு. வெளிநாட்டிற்கு படிக்கும் மாணவர்களுக்கு பணம் அனுப்புவதற்கான வரி குறைப்பு. புற்றுநோய் சிகிச்சைக்கான 17 மருந்தகளுக்கு வரி விலக்கு
தனி நபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை
தனிநபர் வருமான வரி தாக்கலில் மாற்றமில்லை. தனி நபர்கள் வழக்கம் போல் ஜூலை 31 வரை வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம்.
ஏற்றுமதியை ஊக்குவிக்க புதிய திட்டம்
கடல்சார் பொருட்கள், தோல், ஜவுளி ஏற்றுமதியை ஊக்குவிக்க புதிய திட்டம். சேலார் தகடுகள், அணு மின் உற்பத்தி சார்ந்த பொருட்களுக்கான இறக்குமதி வரியில் சலுகை
தனி நபர் வருவாய்க்கான (வருட வருமானம்) வரி விபரம் :
ரூ. 4 லட்சம் வரை 0%
ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை - 5%
ரூ.8 லட்சம் முதல் 12 லட்சம் வரத - 10%
ரூ.16 லட்சம் முதல் 20 லட்சம் வரை - 20%
ரூ.20 லட்சம் முதல் 24 லட்சம் வரை - 25 %
24 லட்சத்திற்கும் மேல் - 30 %
பங்குச் சந்தையில் பெரும் சரிவு
பட்ஜெட் தாக்கல் செய்து முடித்த நிலையில் தற்போது இந்திய பங்குச் சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தையில் நிப்டி 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது.