சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?
Aug 15, 2025,11:49 AM IST
- மைத்ரேயி நிரஞ்சனா
அனைவருக்கும் இனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள்.
சுதந்திரம் - ஆன்மீகம் இதற்கு நேரடியான தொடர்பு உண்டு.
கடவுளைப் போல் மனிதன் சுதந்திரமானவன். அடிமைத்தனம் அவனால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.. தலைவர்கள் வருவதுண்டு! ஆட்சிகள் அமைவதுண்டு! ராஜாக்கள், ராஜ்ஜியங்கள் இருந்தன!
மக்களின் நன்மையை கருத்தில் கொள்ளாமல் தன் / தன்னைச் சேர்ந்தவர்களின் சுயலாபத்திற்காக அரசு இயந்திரம் இயங்கும்போது அது மக்களுக்கு தாம் அடிமையாக இருக்கிறோம் என்ற உணர்வை தரும் போது தாங்கிக் கொள்ள முடியாத விஷயமாக மாறிவிடுகிறது..
ஆன்மீகத்திற்கும் சுதந்திரத்திற்கும் என்ன தொடர்பு ?
நம் இந்தியாவில், மனிதப் பிறப்பு எடுத்தது முக்திக்காக என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறது ! மரணம் இல்லா பெருவாழ்வு!
மனிதனால் மரணத்தை வெல்ல முடியும் என்று சில தனி நபர்களும் குழுக்களும் நம்பியதால் பல பரிசோதனை முயற்சிகள் மேற்கொண்டு வந்தார்கள்.. இந்த உடல் அழிவிற்கு அப்பாற்பட்டது அல்ல! இது மிக எளிய உண்மை.. இந்த மண்ணிற்கு சொந்தமானது! இந்த மண்ணில் இருந்து தோன்றியது இந்த மண்ணுக்கு செல்லும்..
நாம் இந்த உடல் அல்ல.. நாம் இந்த சமூகம் உருவாக்கிய மனமும் அல்ல.. இதை தாண்டிய ஒரு நிலை ஒரு இருப்பு, இதை உணர்வது மட்டுமே மனிதனுக்கு சுதந்திர உணர்வை தர முடியும்! இதை உணர்வதற்கான சாத்தியக்கூறுகளை அளிப்பது ஆன்மீகம் மட்டுமே!
ஒரு சிறிய கதையை பார்க்கலாமா?
காஷ்முக்ஷ் அப்போது ராணுவத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.. அவருக்கு சில பணிகள் கொடுக்கப்பட்டிருந்தன.. வேலையை முடித்துவிட்டு மாலை ஆனதும் பணிக்காக கொடுக்கப்பட்ட அந்த ஷூ வை கழட்டிவிட்டு “அப்பாடா இப்போது எவ்வளவு Free ஆக இருக்கிறது” என்று நிம்மதி அடைவார்..
இதை பல நாட்களாக பார்த்துக் கொண்டிருந்த அவரது நண்பர் “நீ என் இதற்கு அடுத்த ஷூ சைஸை வாங்கிக் கொள்ளக் கூடாது” என்று கேட்க காஷ்முஷ் பதில் சொல்கிறார் …
“காலையிலிருந்து எவ்வளவு வேலை.. இந்த ஷூவை எடுக்கும் போது எனக்கு கிடைக்கும் relaxation மற்றும் நிம்மதியை இழக்க சொல்கிறாயா? “
இது போல் தானே நாமும்.. எவ்வளவு வளையங்களை நமக்கே போட்டுக் கொண்டு துன்பப்படுகிறோம்.. சில பிரச்சினைகள் பிறரால் கொடுக்கப்பட்டாலும் பல பிரச்சினைகள் நமக்கே நான் உருவாக்கிக் கொள்வது தான்!
சுதந்திரம் என்பது இந்த மனச்சிறையிலிருந்து வெளிவருவது! (Mind is Our Prison) இந்த சாத்தியத்தினை, இந்த உள் திரும்பி பார்த்தலை கொடுப்பது ஆன்மீகம் !
அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
நாம் தொடர்வோம்
மைத்ரேயி நிரஞ்சனா.. எழுத்தாளர், பேச்சாளர், பாடகி என பன்முகத் திறமையாளராக வலம் வருகிறார். இல்லத்தரசி என்ற நிலையிலும் சிறந்து விளங்குபவர். மதுரையில் பிறந்தவர், சேலத்தில் வசிப்பவர். அடிப்படையில் ஒரு பொறியாளர். கடந்த 15 வருடமாக ஆன்மீகம் மற்றும் தியானத்தில் அதிக ஈடுபாடு. ஒரே மனித குலம் அமைய வேண்டும் என்ற கனவுடன் வலம் வருபவர். ஆன்மிகம் மட்டுமே மனிதகுலத்தை பயமற்ற, போட்டியில்லாத புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும், அங்கு பணம் மற்றும் போட்டிக்குப் பதிலாக அன்பு மட்டுமே அடிப்படையாக இருக்கும். பொறுப்புடன் கூடிய சுதந்திரமே புதிய மதமாக இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்.