77வது குடியரசு தினமும்.. வந்தே மாதரத்தின் 150வது ஆண்டு விழாவும்.. சிறப்பு!

Swarnalakshmi
Jan 26, 2026,03:02 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


இந்தியாவின் இந்த வருட குடியரசு தினம் சிறப்பான பெருமையைப் பெற்றுள்ளது. ஆம், வந்தே மாதரத்தின் 150வது ஆண்டு தினத்தையும் இந்த ஆண்டு மக்கள் கொண்டாடுகிறார்கள் என்பதே அந்த கூடுதல் சிறப்பாகும்.


2026 ஆம் ஆண்டு இந்தியா 77வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடுகிறது. அனைவருக்கும் தென் தமிழ் சார்பாக குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.


20 26 குடியரசு தினம் கருப்பொருள்  (Theme):




ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்திற்கு ஒரு தனித்துவமான கருப்பொருள் உண்டு.  20 26 ஆம் ஆண்டின்  கருப்பொருள்  'வந்தே மாதரம் 150வது ஆண்டு '


The theme for 2026 is the 150th anniversary of "VandeMataram ". நமது தேசிய பாடல் உருவான 150 வது ஆண்டு கொண்டாடும் வகையில் அணிவகுப்பு முழுவதும் தேசபக்தி  மணம் கமழ்கிறது.


பல தியாகிகளின் தியாகங்களையும் பலரின் போராட்டங்களையும் கடந்து உருவான நாடு நம் இந்திய நாடு. நாம் இந்திய நாட்டின் குடிமக்கள் என்பதில் என்றும் பெருமை கொள்வோம்


தேசபக்தியுடன் குடியரசு தினத்தில் மரியாதை செலுத்தி நம் நாட்டின் வளர்ச்சியில் நாமும் பங்காற்றுவோம் என உறுதிமொழி நாம் அனைவரும் ஏற்போம். இன்று விடுமுறை நாளாக மட்டுமல்லாமல் நம் இந்திய நாடு கடந்து வந்த பாதையையும் நமக்கான உரிமைகளையும் நினைவு கூறும் நாள் ஆகும்.


வரலாற்று பார்வை ஜனவரி 26 :


நம் நாட்டிற்கு 1947 இல் சுதந்திரம் கிடைத்தாலும் நமக்கென்று ஒரு சட்டம் தேவைப்பட்டது. டாக்டர்.பி. ஆர்.அம்பேத்கர் தலைமையிலான குழு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் உழைத்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியது. 


1930 ஜனவரி 26 அன்று காங்கிரஸ் மாநாட்டில் "பூர்ண ஸ்வராஜ்"(poorna swaraj) முழு சுதந்திரமே நமது லட்சியம் என உறுதி ஏற்கப்பட்டது. அந்த வரலாற்று சிறப்புமிக்க நாளை நினைவு  கூரவே 1950 ஜனவரி 26 அன்று அரசியல் அமைப்பு சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டு இந்தியா குடியரசு நாடாக மலர்ந்தது.


குடியரசு தின விழாவில்  சிறப்புகளை பற்றி காண்போம்.. 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி இந்தியா, குடியரசு நாடு என அறிவிக்கப்பட்டது.


குடியரசு தினத்தை ஒட்டி தில்லி  'கர்த்தவ்ய  பாதை'யில் நம் நாட்டின் ராணுவ வல்லமை மற்றும் கலாச்சாரத்தை பறைசாற்றும் கண்கவர் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 10,000 சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர்.


குடியரசு தின அணிவகுப்பின் கருப்பொருள்" வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகள் " என்பதை உணர்த்தும் வகையில் ஏறத்தாழ 2,500 கலைஞர்கள் தங்கள் கலாச்சார நிகழ்ச்சிகளை வழங்கிச் சிறப்பித்தனர். சுமார் 10,000 விவசாயிகள், மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சிறப்பு விருந்தினர்களாக குடியரசு தின விழாவில் கலந்து கொண்டனர். இது இன்றைய விழாவின் தனிச்சிறப்பு  ஆகும்.


அணிவகுப்பில் தமிழ்நாடு மின்வாகன உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக உருவெடுத்திருக்கிறது. "பசுமை ஆற்றல் மற்றும் தற்சார்பு இந்தியா" என்ற கருப்பொருளை உள்ளடக்கிய தமிழ்நாட்டின் அலங்கார அணிவகுப்பு ஊர்தி, பாரம்பரியத்தையும் நவீன தொழில்நுட்பத்தையும் இணைத்து வழங்கியது. தமிழ்நாட்டின் கலாச்சார வலிமை,மாறாத உணர்வையும் குறிக்கும் வகையில் 'ஜல்லிக்கட்டு'  சித்தரிக்கப்படுகிறது.


இயற்கையும் நவீனமும் கலந்து அணிவகுப்பில் மயிலாட்டம்,ஆடும் பாரம்பரிய பரதநாட்டிய கலைஞர்கள் மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு,சிலம்பம் சுற்றும் வீர மங்கையர்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


குடியரசு தினத்தின்  முக்கியத்துவம்:


குடியரசு தினம் என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளையும், கடமைகளையும் நினைவுபடுத்தும் ஒரு சிறந்த நாள்.பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில் "வேற்றுமையில் ஒற்றுமை" காண்பதே இந்த நன்னாளின் உண்மையான வெற்றியாகும்.


அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள். மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருக்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.