வந்தே மாதரம்.. 150வது ஆண்டைக் கொண்டாடும் இந்தியாவின் தேசியப் பாடல்!
- ஸ்வர்ணலட்சுமி
இந்தியாவின் தேசிய பாடல்"வந்தே மாதரம்" உருவாகி 150ஆவது ஆண்டு விழா : (Celebrating 150 years of VandeMataram) விசுவாவசு வருடம் 20 25 நவம்பர் 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்தியாவின் தேசிய பாடலான "வந்தே மாதரம்" இயற்றப்பட்டதன் 150வது ஆண்டு விழாவை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை நாடு முழுவதும் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழாவில் நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பங்கேற்கிறார்.
வந்தே மாதரம் எழுதியவர் :
பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய நமது தேசிய பாடலான வந்தே மாதரம் 1875 ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி 'அக்ஷய நவமி' அன்று எழுதப்பட்டது. வந்தே மாதரம் முதன் முதலில் இலக்கிய பத்திரிகையான பங்க தர்ஷனில் அவரது ' ஆனந்த மத்' நாவலின் ஒரு பகுதியாக வெளியானது.
கொண்டாட்டம்:
நவம்பர் 7, 20 25 முதல் நவம்பர் 7, 20 26 வரை இந்த விழா ஆண்டு முழுவதும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு கால நினைவேந்தலின் அதிகாரப்பூர்வ தொடக்கத்தை துவக் கி வைக்கிறார். நாடு முழுவதும் உள்ள 150 இடங்களில் வந்தே மாதரம் பாடலை ஒரே நேரத்தில் பாடும் ஒரு பெரிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் தேசிய பாடலான "வந்தே மாதரம்" உருவாகி 150 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன்" மன் கி பாத் "நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
வந்தே மாதரம் பாடல் வெளியாகி 150வது ஆண்டு நினைவு போற்றும் வகையில் கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமை ஆயிரம் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய தேசிய கீதம் "ஜன கனமன "பாடலுக்கு நிகராக மதிக்கப்படுகிறது 'வந்தே மாதரம் 'பாடல். நம் நாட்டின் சுதந்திர தினம், குடியரசு தினம், விளையாட்டு& ராணுவ நிகழ்ச்சிகளில் இப்பாடல் பாடப்படுகிறது.
நாடு முழுவதும் "வந்தே மாதரம்" பாடல் :
நாட்டின் தேசிய பாடலான "வந்தே மாதரம்" இயற்றப்பட்டதன் 150 ஆவது ஆண்டு தினத்தை ஒட்டி நாடு முழுவதும் இன்று 150 இடங்களில் இப்பாடல் பாடும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று புதுடில்லி இந்திரா காந்தி மைதானத்தில் உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் பங்கேற்கிறார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தாரக மந்திரமாக விளங்கியது "வந்தே மாதரம் 'பாடல்.
1875இல் பக்கிம் சந்திர சாட்டர் ஜியால் இயற்றப்பட்ட இப்பாடல் கடந்த 1896 இல் கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் ரவீந்திரநாத் தாகூர் பாடிய பிறகு இப்பாடல் பிரபலம் அடைந்தது.கடந்த 1950 இல் அரசியல் நிர்ணய சபையால் நாட்டின் தேசிய பாடலாக" வந்தே மாதரம்" ஏற்கப்பட்டது.
இந்தியா முழுவதும் பொது இடங்களில்" வந்தே மாதரம்" பாடல் பாடுவதன் மூலம் இன்று தொடங்கப்படுகிறது. இந்த நினைவு நாள் தாய் நாட்டின் மீதான ஒற்றுமை மற்றும் அன்பின் மதிப்புகளை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதே வேளையில் பாடலின் வரலாற்று, கலாச்சாரம் மற்றும் தேச பக்தி பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.
"வந்தே மாதரம்"!
மேலும் இன்று பிறந்தநாள் மற்றும் திருமண நாள் கொண்டாடும் அனைவருக்கும் தென் தமிழ் சார்பாக நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.