India's Global Outreach: கனிமொழி குழு எந்தெந்த நாடுகளுக்கு செல்கிறது?.. வெளியானது Full list!
டெல்லி: பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளை உலக நாடுகளுக்கு விளக்கிச் சொல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள 7 குழுக்களின் விவரமும், அவர்கள் எந்தெந்த நாடுகளுக்குப் போகப் போகிறார்கள் என்ற விவரத்தையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானின் தீவிரவாத ஆ,தரவுப் போக்கிற்கு எதிராக தற்போது இந்தியா கடுமையான நிலைப்பாட்டைக் கையில் எடுத்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பாகிஸ்தானை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான தனது நடவடிக்கைகள் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கிச் சொல்ல இந்தியா திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக 7 எம்.பிக்கள் தலைமையில் 7 குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. இதில் 3 பேர் இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள். மற்ற 4 பேரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்தக் குழுவில் கனிமொழி கருணாநிதியும் ஒருவராக இடம் பெற்றுள்ளார்.
இந்தக் குழுக்களில் இடம் பிடித்துள்ள எம்.பிக்கள் விவரம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விவரம் இதோ:
குரூப் 1
பைஜெயந்த் பாண்டா (பாஜக) தலைமையிலான குழு சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், அல்ஜீரியா ஆகிய நாடுகளுக்குச் செல்லும். அந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் விவரம்:
நிஷிகாந்த் துபே, பாங்க்னோன் கோன்யாக், ரேகா சர்மா, அசாதுதீன் ஓவைசி, சத்னம் சிங் சாந்து, குலாம் நபி ஆசாத், ஹர்ஷ் ஷிரிங்கலா (தூதர்)
குரூப் 2
ரவி சங்கர் பிரசாத் (பாஜக) தலைமையிலான 2வது குழு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐரோப்பிய யூனியன், இத்தாலி, டென்மார்க் நாடுகளுக்கு செல்லும். குழுவின் இதர உறுப்பினர்கள்:
டகுபதி புரந்தேஸ்வரி, பிரியங்கா சதுர்வேதி, குலாம் அலி கத்தனா, அமர் சிங், சமிக் பட்டச்சார்யா, எம்.ஜே.அக்பர், பங்கஜ் சரண் (தூதர்)
குரூப் 3
சஞ்சய் குமார் ஜா (ஐக்கிய ஜனதாதளம்) தலைமையிலான 3வது குழு இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் செல்லும். குழுவின் இதர உறுப்பினர்கள்:
அபராஜிதா சாரங்கி, யூசுப் பதான், பிரிஜ் லால், ஜான் பிரிட்டாஸ், பிரதான் பருவா, ஹேமங் ஜோஷி, சல்மான் குர்ஷித், மோகன் குமார் (தூதர்)
குரூப் 4
ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா) தலைமையிலான 4வது குழு ஐக்கிய அரபு எமிரேட்ஸ், லைபீரியா, காங்கோ, சியாரோலியோன் ஆகிய நாடுகளுக்குச் செல்லும். குழுவின் இதர உறுப்பினர்கள்:
பன்சூரி ஸ்வராஜ், முகம்மது பஷீர், அதுல் கார்க், சஸ்மித் பத்ரா, மனன் குமார் மிஸ்ரா, எஸ்.எஸ். அலுவாலியா, சுஜன் சினோய் (தூதர்)
குரூப் 5
சசி தரூர் தலைமையிலான குழு அமெரிக்கா, பனாமா, கயானா, பிரேசில், கொலம்பியா நாடுகளுக்குச் செல்லும். குழுவின் பிற உறுப்பினர்கள்.
சாம்பவி, சர்பிராஸ் அகமது, ஹரீஷ் பாலயோகி, சஷாங் மணி திரிபாதி, புபனேஸ்வர் கலிடா, மிலிந்த் முரளி தியோரா, தேஜஸ்வி சூர்யா, தரஞ்சித் சிங் சாந்து (தூதர்)
குரூப் 6
கனிமொழி கருணாநிதி தலைமையிலான 6வது குழு ஸ்பெயின், கிரீஸ், ஸ்லோவேனியா, லாத்வியா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்குச் செல்லவுள்ளது. குழுவின் பிற உறுப்பினர்கள்.
ராஜீவ் ராய், மியான் அல்டாப் அகமது, பிரிஜேஷ் செளதா, பிரேம் சந்த் குப்தா, அசோக் குமார் மிட்டல், தூதர்கள் மஞ்சீவ் பூரி மற்றும் ஜாவேத் அஷ்ரப்.
குரூப் 7
சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் கட்சி) தலைமையிலான குழு எகிப்து, கத்தார், எத்தியோப்பியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்குச் செல்லும். குழுவின் பிற உறுப்பினர்கள்:
ராஜீவ் பிரதாப் ரூடி, விக்ரம்ஜீத் சிங் சாஹ்னி, மனீஷ் திவாரி, அனுராக் சிங் தாக்கூர், லாவு ஸ்ரீகிருஷ்ண தேவராயலு, அனந்த் சர்மா, வி. முரளீதரன், தூதர் சையத் அக்பருதீன்.