Pralay Missile: ஏவுகணைகளின் பிறப்பிடம் ஆகிறதா இந்தியா?.. பிரமிக்க வைக்கும் பிரளய்!

Su.tha Arivalagan
Jan 01, 2026,07:27 PM IST

- க.சுமதி


பெங்களூரு: சிந்தூர் நாயகன் பிரமோஸின் வெற்றியை தொடர்ந்து இந்தியா பல்வேறு நாடுகளுக்கு பிரமோஸ் ஏவுகணையை சந்தைப்படுத்தி வருகிறது. இதன் தொழில்நுட்பம் உலகத்தோரை வியக்க வைக்கும் நிலையில், தற்போது தரைவழியில் பயன்படுத்தும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பிரளய் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது இந்திய பாதுகாப்புத் துறையை சார்ந்த டிஆர்டிஓ நிறுவனம்.


பிரளய் ஏவுகணைகள் 500 கிலோ முதல் 1000 கிலோ வரை வெடிபொருட்களை சுமந்து செல்லும் திறன் வாய்ந்தது. இது தனது இயக்கு இலக்குகளை 350km முதல் 500km வரை சென்று சரியாக குறி தவறாமல் தாக்க வல்ல தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.


பல்வேறு இலக்குகளுக்கு எதிராக பல்வேறு வகையான குண்டுகளையும் சுமந்து செல்லக்கூடிய திறன் கண்டது. தாக்குதலின் துல்லியத்தை சரியாக செய்வதற்காக இதனுள் அதிநவீன வழிகாட்டுதல் தொழில்நுட்ப அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளது. சீனாவின் டாங்பெங் 12 ஏவுகணை, ரஷ்யா வின் இங்சன்டர் ஏவுகணைகளுக்கு பிரளய் ஏவுகணை சமான திறன் கொண்டது. 


பிரளய் ஏவுகணையின் சிறப்பம்சம் 




இந்த ஏவுகணைகள் உற்பத்தியில் பாரத் டைனமிக்ஸ் பாரத் எலக்ட்ரானிக்ஸ் உள்பட்ட பல்வேறு நிறுவனங்கள் பங்கு வகிக்கின்றன. பிரளய் ஏவுகணைகளின் சோதனை ஒரிசா மாநிலம் பாலசூர் கடலோரத்தில் உள்ள டாக்டர் அப்துல் கலாம் தீவில் அமைந்துள்ள சந்திப்பூர் ஏவுகணை சோதனை தளத்தில் இன்று காலை 10.30 மணிக்கு பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்ப‌த்திலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணைகள் அதனுடைய இலக்கை துல்லியமாக தாக்கி அழித்து வெற்றி வகை சூடியது.


ஏவுகணை சோதனையின் போது டிஆர்டிஓ விஞ்ஞானிகள் இந்திய விமானப்படை ராணுவ அதிகாரிகள் உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் போன்றோர் நேரடியாக பார்வையிட்டனர். ஏவுகணை சென்ற பாதையை  தொலைநோக்கு சாதனங்கள் துல்லியமாக கண்காணித்தன என்றும் இந்த ஏவுகணை, திட்டத்தின் நோக்கம் அனைத்தையும் பூர்த்தி செய்தன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு


இந்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரளாய் ஏவுகணை சோதனை வெற்றிக்கு, டி.ஆர்.டி.ஓ, விமானப்படை மற்றும் ராணுவப்படை அதிகாரிகளுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும்  தெரிவித்துள்ளார்.


மேலும் இச்சாதனையின் மூலம் இந்த ஏவுகணையின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தியா சீனா ஹசல் எல்லைக்கோடு பகுதியிலும் இந்தியா பாகிஸ்தான் பாதுகாப்பு எல்லைக்கோட்டு பகுதியிலும் இந்த ஏவுகணைகள் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.


பிரளய் ஏவுகணைகள் இந்திய எல்லை பாதுகாப்பில் ஒரு மயில்கல்லாக திகழும் என்பதில் ஐயமில்லை.


(க.சுமதி, தென்தமிழ்- சிட்டிசன் ஜர்னலிஸ்ட்)