ராத்திரி 11 மணியானா போதும்.. இந்தியர்கள் அதிகமாக ஆர்டர் செய்வது இதைத்தானாம்!

Su.tha Arivalagan
Dec 24, 2025,06:44 PM IST

- அ.கோகிலா தேவி


சென்னை: இந்தியர்கள் இரவில் ஆன்லைனில் அதிகம் ஆர்டர் செய்யும் உணவு எது தெரியுமா வாருங்கள் பார்ப்போம்.


சுவிகியின் (Swiggy) 10-வது வருடாந்திர அறிக்கையின் (How India Swiggy'd 2025) படி இந்தியர்களின் விருப்பமான உணவாக பிரியாணி முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் வினாடிக்கு  3. 25 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்படுகின்றன. இதில் 57.7மில்லியன் ஆர்டர்களுடன் சிக்கன் பிரியாணி முதலிடத்தில் உள்ளது.


இரவு நேரங்களில் (11 pm - 6 AM )உணவு ஆர்டர் செய்யும் பழக்கம் முன்பை விட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.


இதில் இந்தியர்கள் அதிகம் விரும்புவது சிக்கன் பர்கர். சுமார் (2.3 மில்லியன் ஆர்டர்கள்) பிரியாணி ,கேக் மற்றும் இனிப்புகள், குளிர்பானங்கள்.




இந்தியர்கள் நள்ளிரவில் ஒரு பக்கம் ஜங்க் ஃபுட் சாப்பிட்டாலும் மறுபக்கம் ஆரோக்கியமான உணவுகள் மீதான ஆர்வமும் 2.3 மடங்கு உயர்ந்துள்ளது.


புரதச்சத்து அதிகம் கொண்ட உணவுகளுக்கு 23 மில்லியன் ஆர்டர்கள் கிடைத்துள்ளன.பெங்களூரு ,மும்பை, ஹைதராபாத் நகரங்கள் இதில் முன்னணியில் உள்ளன.


வெஜ் தோசை 26.2 மில்லியன் ஆடர்களும் தென்னிந்திய உணவுகளில் டாப் லிஸ்டில் உள்ளது.


(அ.கோகிலா தேவி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)