INS Mahe.. இந்தியாவின் சைலென்ட் ஹண்டர் மும்பையில் களமிறங்கியது!
Nov 24, 2025,03:17 PM IST
- அ.சீ. லாவண்யா
மும்பை: இந்திய கடற்படையின் புதிய சக்தியாக, முழுமையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட INS Mahe எதிர்அடுக்கு போர்க்கப்பல் இன்று மும்பையில் அதிகாரப்பூர்வமாக பணியமர்த்தப்பட்டது.
குறுகிய ஆழக் கடலில் கூட அதிவேகமாக செயல்படக்கூடிய திறனுடன் வடிவமைக்கப்பட்ட இந்த ASW Shallow Water Craft, எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களை கண்டறிந்து துல்லியமாக தாக்கக்கூடிய திறனுக்காக "Silent Hunter" என்றும் செல்லமாக அழைக்கப்படுகிறது.
Make in India திட்டத்தின் திறனை வெளிப்படுத்தும் Mahe, மேம்பட்ட ஸோனார், ராக்கெட் லாஞ்சர், டார்பிடோ உள்ளிட்ட நவீன ஆயுதங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்கு பிராந்திய கடற்பரப்பின் கடல் பாதுகாப்பை பல மடங்கு உயர்த்தும் நோக்கில், Mahe இன்று முதல் இந்திய கடற்படையின் புதிய காவலனாக பணியில் இணைந்துள்ளது.
உயர் வேகத்தில் இயங்கும் திறன் மற்றும் கடலில் நீண்டநேர தற்காப்பு, கண்காணிப்பு செயல்பாடுகளுக்குத் தேவையான சக்தி ஆகியவற்றாலும் 'Mahe' சிறப்பு கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்த புதிய போர்க்கப்பல் சேர்க்கை, இந்திய கடற்படையின் கடல்சார் பாதுகாப்புத் திறனை மேலும் உயர்த்தும் என பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Mahe கப்பல் சேவையில் இணைவதால் இந்திய கடற்படை, இந்தியப் பெருங்கடல் பகுதியில் எதிரிக்கட்சிகளின் நீர்மூழ்கிக் கப்பல் அச்சுறுத்தல்களை மேலும் துல்லியமாக எதிர்கொள்ளும் திறனைப் பெற்றுள்ளது.
(அ.சீ. லாவண்யா, திருவண்ணாமலை தடம் பதிக்கும் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)