இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
சென்னை: இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான இலக்கியா அதிக அளவிலான மாத்திரைகளை சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் சாப்பிட்டது ஊக்க சத்து மாத்திரை என்று கூறப்படுகிறது. அதிக அளவில் சாப்பிட்டதால் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்பு டிக் டாக்கிலும், பின்னர் இன்ஸ்டாகிராமிலும் ரீல்ஸ் போட்டு வந்தவர் இலக்கியா. தனது கவர்ச்சிகரமான ரீல்ஸ்களால் பிரபலமானார். அவரது ரீல்ஸ்கள் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் கூட விடாமல் தனது ரீல்ஸ்களால் கலக்கி வந்தார் இலக்கியா. பின்னர் ஒரு கட்டத்தில் கவர்ச்சிகரமான ரீல்ஸ்களை விட்டு விட்டு சமையல் வீடியோக்களில் இறங்கினார்.
அவரது சமையல் வீடியோக்கள், இன்ஸ்டாகிராமிலும், யூடியூபிலும் பிரபலமாகி வைரலாகின. காட்டுப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் இலக்கியா இன்று திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முதலில் அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டதாக கூறப்பட்டது. காரணம் அவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட் குறித்து வெளியான தகவல். ஆனால் தற்போது அதிக அளவிலான ஊக்க சத்து மாத்திரைகளை சாப்பிட்டதால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இலக்கியாவுக்கு என்னாச்சு, ஏன் இப்படி சாப்பிட்டார் என்பது குறித்து தெரியவில்லை.