சென்னை மாநகராட்சிப் பள்ளியில் .. சர்வதேச யோகா தினம்.. மாணவர்கள் அசத்தல்

Su.tha Arivalagan
Jun 20, 2026,04:15 PM IST

- முனைவர் கோ.லதா


சென்னை:  சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சி பெரியசேக்காடு பள்ளியில் மாணவர்களுக்கு யோகாசனம் தியானங்கள் மூச்சுப் பயிற்சி மற்றும் அதனுடைய நன்மைகள் எடுத்துரைக்கப்பட்டது.


யோகா ஆசிரியர் பாரத் சேவா ரத்னா மரபுப்பாவலர் எழுத்தாளர் மாநில நல்லாசிரியர் கல்வித்தூதர் பன்முக உலக சாதனையாளர்  முனைவர் லதா விளக்கம் அளித்து மாணவர்களுக்கு செய்து காட்டினார்.


சிறப்பு அழைப்பாளர்களாக ஏ எம் பவுண்டேஷனில் இருந்து வந்திருந்து மாணவர்களுக்கு யோகா நிகழ்வுகளை செயல்முறைகளை மருத்துவ ரீதியான நன்மைகளை மாணவர்களுக்கு விளக்கி எடுத்துரைத்தனர். 


இதற்கு கல்வியாளர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர் என்பது பாராட்டுதற்குரியது.




முனைவர் லதாவின் பிற கவிதைகள்:


மக்கள் ஓர் நிறை ஒன்றே இறைவன்.


சாதி இரண்டொழிய வேறில்லை என்பார்

நீதி நெறியில்  நேர்மை கொண்டார்

மக்கள் ஓரினம் மனிதம் ஒன்றே

இறைவன் ஒருவன் இருப்பதும் உண்மை


கோயிலும் மசூதியும் தேவாலயமும்

வேறாய் தெரிந்தாலும் விளங்கிடும் உண்மை 

அன்பே இறைவன் அவனே நிறைவு

பண்பே வாழ்வு பகையே இழிவு


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றார்

சிறப்பொவ்வா  செய்கை வேறாகும்

மனிதன் மனிதனை மதித்து வாழ்ந்தால்

இனிது உலகம் இறைவன் மகிழ்வான்


வேற்றுமை பேசி வீணில் கலங்கேல்

ஒற்றுமை கொண்டால் உலகம் உயரும்

மக்கள் ஓர்நிறை மாண்புடன்  வாழ்வோம்

ஒன்றே இறைவன் உள்ளத்தில் காண்போம்


--


சிறுவர் முதல் பெரியோர் வரை வாசிப்போம்,  

அறிவு விளக்கை அகத்தில் ஏற்றுவோம்,  

புத்தகம் துணை புலமை தரும்,  

எத்திசை சென்றும் ஏற்றம் தரும்.  


தொட்டில் பழக்கம் தொடர்ந்து வளரும்,  

கற்றல் இன்றி கரையேறலாகா,  

வாசிப்பே உலகை வசப்படுத்தும்,  

ஆசை மொழியில் அறிவு பெருகும்.  


நாளும் ஒருபக்கம் நலமாய் படித்தால்,  

ஞானம் தானே நம்மில் சேரும்,  

மூதோரும் கூட முயன்று வாசிப்பார்,  

ஏதும் அறியா இருள் நீங்கும்.  


ஜூன் பத்தொன்பது ஜோதியாய் ஒளிரும்,  

வாசிப்பு தினம் வாழ்த்தி வணங்குவோம்,  

தேசம் உயர தினமும் படிப்போம்,  

மேதை ஆவோம் மேன்மை கொள்வோம்.


--


என்றன் பள்ளி 


மண்ணில் முதலெழுத்து மனதில் பதிந்தபள்ளி

கண்ணில் கனவாய் காட்சிதரும் பள்ளி

ஆசிரியர் அன்பும் அடிப்பு ஓசையும்

பாசமாய் நெஞ்சில் பதிந்த நினைவு 


மரத்தடி வகுப்பும் மணியோசை கேட்டும் 

பரத்தையர் சிரிப்பும் பாட்டும் கேட்கும் 

இன்றும் என்உள்ளம் இளமை தேடும்

என்றன் பள்ளியே என்றும் வாழும்




ஜனாதிபதி திரௌபதி முர்மு பிறந்தநாள் வாழ்துக் கவிதை


ஜூன் மாதம் இருபதாம் நாள் பிறந்தாய் அம்மா,  

ஜனநாயக தாய் ஜொலிக்க வந்தாய் அம்மா,  

ஒடிசா மண்ணின் ஓங்கார ஒலியே,  

உயர்ந்த குடும்பம் உலகம் கண்டதே.  


பழங்குடி மக்களின் பாசத்தின் தாயே,  

பாரத தேசத்தின் பெருமை நீயே,  

ஆசிரியை ஆனாய் அறிவை வளர்தாய்,  

அரசியல் வந்து அனைவரும் போற்றினார்.  


சட்டமன்ற உறுப்பினர் சரித்திரம் படைத்தாய்,  

அமைச்சராய் ஆண்டு அருளை புரிந்தாய்,  

ஆளுநராய் ஜார்கண்ட் ஆட்சி செய்தாய்,  

அன்பால் மக்களை அரவணைத்தாய்.  


முதல் பழங்குடி மூதாட்டி நீயே,  

முதல் பெண்ணாய் ஒடிசா பெற்றதே,  

இரும்பு பெண்மணி என்று பெயர்பெற்றாய்,  

எளிமையின் இலக்கணம் என்றும் நீயே.  


இரண்டாயிரம் இருபத்திரண்டில்,  

இந்தியாவின் இணையில்லா தலைவியானாய்,  

பதினைந்தாம் குடியரசு தலைவரானாய்,  

பாரத அன்னையாய் பதவி ஏற்றாய்.  


ராஷ்டிரபதி மாளிகை ராணியானாய்,  

ராமராஜ்ஜியம் காண வழிகாட்டினாய்,  

மகளிர் சக்தி மண்ணில் விதைத்தாய்,  

மக்கள் நலனே மகுடமாய் கொண்டாய்.  


கல்வி கேள்வி கரையில்லா கடலே,  

கருணை உருவம் கனிந்த தெய்வமே,  

நேர்மை தவறா நெறியின் விளக்கே,  

நாட்டின் காவல் நல்லாட்சி சுடரே.  


துயரம் கண்டும் துவளாத நெஞ்சே,  

தூய்மை நிறைந்த துளசி செடியே,  

ஜனாதிபதி என்ற பதவி பெரிதல்ல,  

ஜனங்களின் உள்ளம் பெற்றதே பெரிது.  


ஜூன் இருபது ஜெயந்தி நாளில்,  

ஜெயம் பொங்குது ஜனங்கள் வாழ்தில்,  

ஆரோக்கியம் நிறைந்து ஆயுள் பெருக,  

அன்னை பராசக்தி அருளை தருக.  


நூறாண்டு வாழ்க நோயின்றி வாழ்க,  

நாட்டுக்கு தொண்டு நாளும் செய்க,  

இந்தியா வாழ்க இணைந்து வாழ்க,  

இல்லற நலமும் இனிதே நிறைக.  


பாரத மாதா பரவிடும் புகழே,  

பார்வையில் கனிவு பண்பின் உறைவே,  

சேவை மனப்பான்மை சிறந்து விளங்க,  

செம்மையுடன் நாடு சிறப்புற வாழ்க.  


குழந்தைகள் கல்வி குன்றாமல் காக்க,  

குடும்பம் ஒன்றாய் குதூகலிக்க,  

வானளாவ உயர்க வையகம் போற்ற,  

வாழ்தி வணங்கி வணக்கம் செலுத்துவோம்.  


திரௌபதி அம்மா திருநாமம் வாழ்க,  

தினமும் வாழ்தி தலைவணங்குகின்றோம்.  


(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா,  கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர்,  சென்னை)