இல்லங்கள் தோறும் சக்கரவர்த்தியாய்!

Su.tha Arivalagan
Nov 19, 2025,05:02 PM IST

- ரேணுகா ராயன்


ஓங்கி வளர்ந்து நிற்கும் 

மரத்தின் செழுமையை

காணும் கண்கள் - அதை 

தாங்கிப் பிடிக்கும் வேரின் 

உழைப்பை அறிவதில்லை...


உச்சி கிளைகளில் 

 எழிலாய் தொங்கும்

 கூடுகளில் ஒளிந்திருக்கும் 

ஆண் பறவையின் அர்ப்பணிப்பு

பெரிதாய் தெரிவதில்லை 




பெண் குளவி இட்ட 

முட்டைகளை பேணி காத்து உயிர்விடும் ஆண் குளவிகளின்

உயிர் தியாகம் வெளிச்சத்திற்கு வருவததே இல்லை 


ஒவ்வொரு பெண்ணின் 

மகிழ்ச்சியான சிரிப்புக்கு 

பின்னால் ஒரு ஆண் ஓயாது உழைக்கிறான். 


தன்னை உருவாக்கிய மற்றும் தனக்காக உருவான குடும்பங்களுக்காக 

 உழைப்பதைத் தவிர

 வாழ்க்கையில் வேறு ஒன்றுமே இல்லை என்று இயங்கும் 

மகாத்மாக்கள். 


இதைப் புரிந்து கொண்ட உறவுகளுக்கு மத்தியில் கொண்டாடப்படும் ஆண் 

மன்னாதி மன்னனே.... 


உழைப்பை தருவேன்- தன்னை தருவதற்கு இல்லை என்போராலும் 

குடும்பத்தை தாங்கி பிடிக்காத சோம்பேறிகளாலும், 

கேடுகள் நிறை பழக்கத்தால் உறவுகளை சந்தியில் நிறுத்துவோராலும்

மொத்தமாய் புறக்கணிக்கப்படுகிறது ஆண்களின் தியாகங்கள். 


குடும்ப பொருளாதாரம்,

உறவுகளின் நிம்மதி,

சமூகப் பொறுப்பு -என்று 

வாழும் ஆண்கள் எப்போதும் 

அன்பின் அங்கீகாரத்தோடு 

ராஜவலம் வருகின்றனர்.

 

இல்லங்கள் தோறும்

சக்கரவர்த்தியாய் வாழும் ஆண்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்