ஆற்றில் போட்டாலும் அளந்து போடு.. இன்றைய நாளை நினைவுகூர்வோம்!

Su.tha Arivalagan
Apr 07, 2026,05:13 PM IST

- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed


ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்ற பழமொழியை கேள்விப்பட்டிருப்போம். இந்த பழமொழியில் இருந்து அளவீடுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது.


ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7-ம்  தேதி தேசிய மெட்ரிக் முறை தினம்( International Metric System Day) உலக அளவில் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.


மெட்ரிக் முறை அளவீடு  வந்த பிறகு அனைத்து நாடுகளிலும் ஒரே அளவான தரத்தில் பொருட்களை கொடுக்கவும், வாங்கவும் முடிந்தது.




 பழங்கால அளவீட்டு முறை (Ancient Measurement System) என்பது மெட்ரிக் முறை வருவதற்கு முன்பு, உலகம் முழுவதும் பல்வேறு பழங்கால அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இதன் மூலம் ஒவ்வொருவரின் அளவீடுகளும் மாறுபட்டு காணப்பட்டன.


 அந்த காலத்தில் அளவுகள் மனித உடலின் கை, கால் போன்றவற்றை  பயன்படுத்தி அளக்கும் முறையாக இருந்தது. இதனால் ஒவ்வொருவருக்கும் எண்ணிக்கை மாறுபட்டு காணப்பட்டன.


முழம் (Cubit) என்பது  கையை அடிப்படையாகக் கொண்டும், அடி (Foot) என்பது  காலின் நீளத்தை அடிப்படையாகக் கொண்டும், அடி (Step) என்பது  நடையின் நீளத்தை அடிப்படையாகக் கொண்டும் அளவீடு செய்தார்கள்.


இந்தப் பழங்கால முறையை மாற்றுவதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தான் மெட்ரிக் முறையாகும். இதன் மூலம் அனைத்து நாடுகளிலும் ஒரே மதிப்பில் அளவீடு செய்ய முடிந்தது. இந்த சிறப்பை நாம் தெரிந்து கொள்வதற்கு  தான் இந்த நாளின் முக்கிய நோக்கமாகும். 


எகிப்து, கிரேக்கம், ரோமன் நாடுகளில் தனித்தனி அளவுகள் இருந்தன. இந்தியாவில் கூட பழங்காலத்தில் ஒரே மாதிரி அளவுகள் பயன்படுத்தப்பட்டது என்பதையும் நாம் தெரிந்து கொள்வோம். உலகளவில் பயன்படுத்தப்படும் அளவீட்டு முறை தான் மெட்ரிக் முறை ஆகும். இது International System of Units (SI Units) என்று அழைக்கப்படுகிறது.


மெட்ரிக் முறையில் பயன்படுத்தப்படும் அடிப்படை அலகுகள் ஏழு ஆகும். 


நீளம் - மீட்டர் (meter)

எடை - கிலோகிராம் (kilogram)

அளவு - லிட்டர் (liter)

நேரம் - விநாடி (second)

வெப்பநிலை -கெல்வின்   


இதுபோன்று அனைவருக்கும் பொதுவான அளவீடுகளை அளப்பதால்  எல்லா நாட்டு மக்களுக்கும் குழப்பம் இல்லாமல் ஒரே மாதிரியான அளவீடுகளை அளக்க முடிந்தது .


நான் மறந்து போன பழங்கால அளவீட்டு  முறைகளையும் இன்றைய நாளில் நினைவுபடுத்திப் பார்ப்போம் .


(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார்.  ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள்  போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார்.)