International Women's Day: எழுந்து நின்று வெற்றிக்கொடி நாட்டு பெண்ணே!

Swarnalakshmi
Mar 06, 2025,01:05 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


சென்னை:  சர்வதேச மகளிர் தினம் நெருங்கி வரும் நிலையில் பெண்கள் குறித்துப் பார்த்து வருகிறோம். பெண்களின் அருமை பெருமைகளைப் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. அத்தனை இருக்கின்றன. 


தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுப்பது மெழுகுவர்த்தி மட்டுமல்ல சில இடங்களில் பெண்களும் தான். தனக்காக வாழ நினைப்பதை விட தன்னை நம்பி இருப்பவர்களுக்காக தன் வாழ்க்கையை பெண்கள் அர்ப்பணித்து விடுகிறார்கள்.


கருவில் மங்கையராய் பிறந்து

வயிற்றில் குழந்தைகளை சுமந்து

மனதில் கணவனை தாலாட்டி

முதுகில் குடும்ப சுமைகளை சுமந்து

தலையில் பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணி

தனக்கென ஒரு வாழ்க்கை வாழாமல் சுயநலமில்லா வஞ்சகம் இல்லா எண்ணங்களுடன் வாழ்பவள் பெண்.




பெண் ஒரு அபூர்வம்:  பெண்கள் அவர்களின் வேதனை மற்றும் தன்னுடைய சொந்த ஆசைகளை வெளிப்படையாக காட்டிக் கொள்ள மாட்டாள். அவளிடம் சிறிது நேரம் மனம் விட்டு பேசும்போது தான் அவளின் உள் உணர்வு வெளிப்படும். அவளின் ஆசை கனவு என்ன ?லட்சியம் என்ன? ஆர்வம் என்ன ?சந்தோஷம் என்ன ?என்று பெண்களே பெண்களுக்கு எதிரியாக வாழாமல் மனம் விட்டு பேசிப்பாருங்கள். பெண் என்பவள் ஓர் அபூர்வம் என்பது புரியும்.


வெற்றிக்கொடி காட்டு பெண்ணே:   உனக்கு எது சுதந்திரம் என்று எண்ணி வாழ கற்றுக்கொள் பெண்ணே.  நசுக்கி நம்மை வீசி எறிந்த உறவுகள் எல்லாம் நடுங்கி ஓடட்டும். ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது என்பதை பொய்யாக்கி பெண்ணே! ஏட்டில் எழுது நீ என்ன ?ஆக வேண்டும் என்பதை, எழுந்து நின்று வெற்றிக்கொடி காட்டு பெண்ணே!


தைரியம்:  பெண்களுக்கு தைரியம் இல்லை என்று யார்? சொன்னது .முதல் குழந்தையை பெற்றெடுத்த பிறகு, இரண்டாவது குழந்தைக்கு தயார் ஆவதில் இருக்கிறது அவளுடைய தைரியம் .ஏனெனில், குழந்தை பெற்றெடுப்பதே மறு ஜென்மம் எடுத்ததற்கு சமம் .அவளுடைய தைரியத்தை பாராட்டுங்கள் இந்த மகளிர் தினத்தன்று.


பெண்களுக்கு எதிரான அனைத்து வன்கொடுமைகளையும் வேரறுக்க வேண்டும். பெண் உரிமை மற்றும் பெண்கள் பாதுகாப்பை முன்னிலை படுத்தவே கொண்டாடப்படுகிறது உலக மகளிர் தினம்.


அவள்:


கண்ணீர் விடுபவளும் அவளே...!!!

கண்ணீர் துடைப்பதும் அவளே...!!!

கண் இமைப்போல் காப்பவளும் அவளே...!!!

கண்மணியே என்று கொஞ்சு பவளும் அவளே...!!!

கனிவோடு அனைவரையும் உபசரிப்பதும் அவளே...!!!

கண்மூடித்தனமாய் அனைத்தையும் நம்புவதும் அவளே...!!!

கணக்குப் போட்டு வாழ்பவளும் அவளே...!!!

சாதிக்க துடிப்பவளும் அவளே...!!!

சாதனை படைப்பவளும் அவளே...!!!


இத்துனை பெருமைமிகு பெண்களுக்கு அட்வான்ஸ் மகளிர் தின நல்வாழ்த்துகள்.