தென்றலும் புயலுமாகிய பெண்மையை போற்றுவோம்..!!
Mar 08, 2025,03:50 PM IST
- கவிஞாயிறு இரா.கலைச்செல்வி
பெண்ணே!!!
நீ...நீ...நீ...நீ....எதிர்கொண்ட
போராட்டங்கள், சவால்கள்..!!
அவமானங்கள், மனதின் வலிகள்..!!
தூங்காத இரவுகள், தூங்கிய சோகங்கள் ..!!
இறந்து போன உன் ஆசைகள்!! கனவுகள்!!!
யாருக்கு தெரியும்??
இன்றைய உன் வெற்றி புன்னகை மட்டுமே!!!!
அனைவருக்கும் தெரியும்..!!
மகளிரின் மாண்பினை கூறவார்த்தைகள் உண்டோ..!!
தனக்கெனவாழா பிறருக்கென வாழும் பெருந்தகையாள்..!!
குடும்பத்தில் அவள்இன்றி ஒருஅனுவும் அசையாது..!!
குடும்பத்தின் சுமைகளை சுகமாய் சுமப்பவள்..!!!
அனைவரையும் அரவணைக்கும் அன்பானவள்..!!
அவள் தாய்பாசத்திற்கு நிகர் ஏதும் உண்டோ..!!
எடுத்த காரியத்தை முடிக்கும் மகத்தான மங்கைஅவள் ..!!
வயல்வெளி முதல் விண்வெளி வரை,
சாதிக்கத் துடிக்கும் மாண்புமிகு மகளிர்..!!
உயிர் கொடுப்பவள் அவளே அன்றோ..!!!
அவள் இல்லாத வீடு ...இருண்ட காடு..!!
அவளை பூமித்தாய்என புகழ்வதும்,
மலடிஎன இகழ்வதும் ஏனோ..!!
தென்றலாய் மனதை வருடியவள்.
அநீதி கண்டால் புயலாய் சீறிபாய்வாள்.
அன்பின் ஊற்றாய் அனைவரையும் அரவணைப்பாள்..!!
அநியாயம் நடந்தால் சிங்கமென கர்ஜனை செய்வாள்.
சாதனைகள் படைப்பதில் அவள் சளைத்தவளும் அல்ல..!!
சவால்களை சந்திப்பதில் அவள் தயங்கியவளும் அல்ல..!!
தன் கனவுகளை வென்றெடுப்பதில் உறுதியானவள்..!!
தன் திறமைகளால் உலகை ஏற்றம் பெற செய்திடுவாள். ..!!
தாயாய் பாசத்தை பொழிந்திடுவாள்..!!
தடைகளை உடைத்தும் உயரே பறந்திடுவாள்..!!
மனைவியாய் அன்பை பரிமாறிடுவாள்..!!
தோழியாய் தக்க நேரத்தில் உறுதுணையாக இருப்பாள்..!!
அவள் பெண்மையான இதயம் கொண்டவள் தான்..!!
அதே நேரம் இரும்பைப் போல் வலிமையான மனமும் கொண்டவள்..!!
பெண் என்பவள் வெறும் அழகு சிலை அல்ல..!!
அவள் ஒரு சாதனைப் பெண் ..!.அவள் ஒரு மகாசக்தி..!!
அவள் அறிவின் ஒளி..! அவள் வீட்டின் ஒளி விளக்கு ..!!
அவள் நாட்டின் நம்பிக்கை ..! அவள் தியாகத்தின் திருவுருவம்..!!
அவள் ஒரு தசாவதாரிணி..!!
தென்றலும் புயலுமாகிய பெண்மையை போற்றுவோம்..!!
பெண்மையை போற்றுவோம்..!!
மாண்புமிகு மகளிரை மதிப்போம்..!!
தொடர்ந்து வெற்றி பெற இந்நாளில் வாழ்த்துகிறேன்.
தென் தமிழோடு இணைந்திருக்கும் அனைத்து மகளிருக்கும்
எனது மனம் நிறைந்த மகளிர் தின நல்வாழ்த்துக்கள்