சர்வதேச யோகா தினம்: அமைதியே ஆன்மா.. மூச்சுப் பயிற்சியே மூலதனம்!
- பன்முகக் கவிஞர் க.முருகேஸ்வரி
எண்ணத்தை ஒருங்கிணைத்து
மனத்தில் நிலை நிறுத்தி
தியானத்தில் தினம் இருந்து
பிராணவாயுவைக் கவனித்து
மூச்சின் மேல் முழுக்கவனம் செலுத்தி
யோகக் கலையைக் கவனமுடன் செய்து பார்
உடலும் மனமும் புதிதாகும்
உலகம் உனது வசமாகும்...
முதுமை உன்னை மறந்து விடும்
பிணியும் அண்டாது பறந்து விடும்
அமைதியே ஆன்மா
மூச்சுப் பயிற்சியே
உன் மூலதனம்
உடம்பைப் போற்று
மூச்சைக் கவனி
பேச்சைத் குறை
எண்ணத்தை நிறுத்து
உன்னை உணர்ந்து யோகி ஆவாய்
உண்மை புரிந்து ஞானி ஆவாய்
வாழ்க வளமுடன்!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).