IPL 2026.. CSKவில் யாருக்கெல்லாம் கெட் அவுட்.. யாரெல்லாம் நீடிப்பாங்க?.. A quick analysis!

Su.tha Arivalagan
May 06, 2025,04:56 PM IST

சென்னை: நடப்பு ஐபிஎல் தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கையை விட்டுப் போய் விட்டது. இனி ஆடும் போட்டிகளில் ஆறுதல் வெற்றிகளை மட்டுமே பெற முடியும்.. ஆனால் அதுக்கும் சான்ஸ் இருக்கான்னே தெரியலை.. காரணம், சென்னை அணி தொடர்ந்து தோற்றுக் கொண்டுதான் உள்ளது. 


2025 தொடர் நம்மை விட்டுப் போய் விட்ட நிலையில் அடுத்த ஆண்டு தொடரிலாவது நாம் அதகளம் செய்வோமா என்ற ஆசையில் ரசிகர்கள் இப்போது அடுத்த ஆண்டு தொடருக்கு தங்களது மனதை ஷிப்ட் செய்ய ஆரம்பித்து விட்டனர். 


அந்த வகையில் அடுத்த ஆண்டு சென்னை அணியில் யாரெல்லாம் நீடிக்க வாய்ப்பிருக்கு.. யாருக்கெல்லாம் கெட் அவுட் சொல்லப்படும் என்ற ஆய்வில் ரசிகர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.


ருத்துராஜ் கெய்க்வாட்.. இவர் கடந்த ஆண்டு கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு தொடரில் சென்னை அணி 5வது இடத்தைப் பிடித்தது. ஆனால் இந்த முறை 10வது இடத்துக்குப் போய் விட்டது. இந்த தொடரிலும் சில போட்டிகளில் ருத்துராஜ் கெய்க்வாட் கேப்டனாக இருந்தார். காயம் காரணமாக பாதியில் போய் விட்டார். தோனி கேப்டனாக செயல்பட்டார். ரூ. 18 கோடி மதிப்பிலான வீரர் கெய்க்வாட்.  அடுத்த ஆண்டும் இவர் நிச்சயம் நீடிப்பார். கேப்டனாகவும் தொடர வாய்ப்பிருக்கிறது. புத்துணர்வோடு ருத்துராஜ் திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள்.




நூர் அகமது - இந்தத் தொடரில் தனது சிறப்பான பந்து வீச்சால் அனைவரையும் கவர்ந்தவர். ரூ. 10 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டவர். அடுத்த வருடத் தொடரில் இன்னும் கலக்கக் கூடிய வாய்ப்புகள் பிரகாசம். இந்தத் தொடரில் சென்னை அணிக்கு கிடைத்த முக்கியமான சில ஆறுதல்களில் இவரும் ஒருவர் ஆவார்.


ஆயுஷ் மாத்ரே - 75 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டவர். 2025 தொடரில் அசத்திய இளம் வீரர்களில் முக்கியமானவர். 17 வயதே ஆவதால் அடுத்த பல ஆண்டுகளுக்கு இவரது கிரிக்கெட் பட்டையைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கலாம். இந்தத் தொடரில் ஆரம்பத்திலிருந்தே இவரை அறிமுகப்படுத்தியிருந்தால் ஒரு வேளை மாஜிக் ஏதாவது நடந்திருக்கலாம் என்ற எண்ணம் ரசிகர்களிடம் உள்ளது.


டெவால்ட் பிரேவிஸ் - ரூ 2.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டவர். பேபி ஏபி என்று அழைக்கப்படும் பிரேவிஸ் இந்தத் தொடரில் முத்திரை பதித்து அடுத்த தொடருக்கும் அச்சாரமிட்டு விட்டார். இந்தத் தொடரில் இவருக்கும் முன்பே வாய்ப்பளிக்கப்பட்டிருந்தால் நிச்சயம் சென்னை அணிக்கு ஏதாவது நல்லது நடந்திருக்கலாம்.


கலீல் அகமது - ரூ. 4.8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட கலீல் அகமது, இந்த் தொடரில் சிறப்பாக பந்து வீசி தனக்கென தனி ரசிகர்களை ஈர்த்து வைத்துள்ளார். அடுத்த தொடரும் இவரது பந்து வீச்சில் கலகலப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை




ராகுல்  திரிபாதி - ரூ. 3.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ராகுல் திரிபாதி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அணியில் இடம் பெற்றார். ஆனால் பெரும் ஏமாற்றத்தையே பரிசாக கொடுத்து ரசிகர்களை வெறுப்பேற்றி விட்டார்.  நிச்சயம் அடுத்த தொடருக்கு இவர் வர வாய்ப்பில்லை. அப்படியே மீறி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. காரணம் சென்னை அணி இதுபோன்ற தவறுகளை தொடர்ந்து செய்து வருவதால் அதற்கும் வாய்ப்பிருக்கிறது.


தீபக் ஹூடா- ரூ. 1.7 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட தீபக் ஹூடா, சுத்தமாக பார்மில் இல்லை. அடுத்த ஆண்டு அணியில் நீடிக்கவும் வாய்ப்பில்லை.


விஜய் சங்கர் - ரூ.1.2 கோடிக்கு சென்னை அணியால் வாங்கப்பட்ட விஜய் சங்கர் முக்கியமான போட்டிகளில் பரிமளிக்கத் தவறி விட்டார். ரசிகர்களையும் ஏமாற்றி விட்டார்.


டேவன் கான்வே - ரூ. 6.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட டேவன் கான்வே, மிஸ்டர் ரிலையபிள் என்ற பெயர் பெற்றவர். ஆனால் இந்தத் தொடரில் அவரும் ஏமாற்றியதுதான் ஆச்சரியமே.


ஆர். அஸ்வின் - பெரும் எதிர்பார்ப்புகளுடன் மீண்டும் சென்னை அணிக்குத் திரும்பியவர் அஸ்வின் . ரூ. 9.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டவர். இந்தத் தொடரில் அவரது செயல்பாடுகளும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளன.


இவர்களை விட மிக மிக முக்கியமாக தோனி அடுத்த தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வியும் உள்ளது. ஒரு வேளை தோனி விளையாடாவிட்டாலும் கூட நிச்சயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் முக்கியப் பொறுப்பில் இணைந்திருப்பார் என்று பலமாக நம்பப்படுகிறது. குறிப்பாக தலைமைப் பயிற்சியாளராக தோனி நியமிக்கப்படலாம்  அல்லது அதை விட முக்கிய பொறுப்புக்கு அவர் மாற்றப்பட வாய்ப்புள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.