ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மோதல்

Su.tha Arivalagan
Apr 07, 2026,01:43 PM IST

கவுகாத்தி : ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 தொடரில் இன்று நடைபெறும் 13வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 07.30 மணிக்கு துவங்குகிறது.


2026ம் ஆண்டிற்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 28ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. மொத்தம் 70 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 10 அணிகள் விளையாடுகின்றன. இதுவரை நடந்து முடிந்த 12 போட்டிகளில் அதிக போட்டிகளில் வெற்றி பெற்று 5 புள்ளிகளுடன் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இடத்திலும், 4 புள்ளிகளுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் முறையே 2 மற்றும் 3 வது இடத்தில் உள்ளன.




ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று கவுகாத்தியில் உள்ள ஏசிஏ மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. நடப்பு ஐபிஎல் கிரிக்கெட்டிற்கான அணிகளின் தரவரிசை பட்டியலில் ராஜஸ்தான் அணி ஏற்கனவே 2வது இடத்தில் உள்ளது. அதே சமயம் மும்பை அணி ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது.


இன்றைய போட்டியில் ராஜஸ்தான அணி வெற்றி பெறும் பட்சத்தில் அதிக புள்ளிகளுடன் அணிகளின் தரவரிசை பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறும். ஒருவேளை மும்பை அணி வெற்றி பெற்றால் கூடுதலாக  2 புள்ளிகளை பெற்று மூன்று அல்லது நான்காவது இடத்திற்கு அந்த அணி முன்னேற வாய்ப்புள்ளது.